மேலும் அறிய

கல்லூரி விடுதியில் ராகிங் - தூக்க மாத்திரை சாப்பிட்டு மாணவர் தற்கொலை முயற்சி

முதற்கட்ட விசாரணையில் கடந்த 23ஆம் தேதி இரவு விடுதியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராக்கிங் செய்ததும், அதில் சரவணனை முட்டி போட வைத்து தெரியவந்துள்ளது

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் நாமக்கல் பகுதியைச் சேர்ந்த சரவணன், இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த விடுதியில் சுமார் 200 மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இரவு விடுதியில் வைத்து மூன்றாம் ஆண்டு படிக்கும் 4 மாணவர்கள் சரவணன் ராகிங் செய்துள்ளனர். அப்பொழுது கழுத்தை நெரித்து தாக்கியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சரவணன் தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரை வாபஸ் பெறும்படி சீனியர் மாணவர்கள் மிரட்டியுள்ளனர் அந்த அச்சமடைந்து புகாரை சரவணன் வாபஸ் பெற்று உள்ளார்.
 
கல்லூரி விடுதியில் ராகிங் - தூக்க மாத்திரை சாப்பிட்டு மாணவர் தற்கொலை முயற்சி
 
இந்நிலையில் விடுதி காப்பாளர் பொறுப்பிலுள்ள இளவரசன் என்பவர் பெத்தாலஜி என்ற பாடப்பிரிவு பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தொடர்ந்து மாணவர் புகார் அளித்ததால், பெத்தாலஜி பாடப்பிரிவில் சரவணனை மதிப்பெண் போடாமல் இருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது தொடர்ந்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் நான் பாதிக்கப்பட்டவன் என்று வைத்து, தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இதை அறிந்த சக மாணவர்கள் நேரில் சென்று பார்த்தபோது மாணவர் சுய நினைவின்றி மயங்கி கிடந்துள்ளார்.இதனை அடுத்து சரவணன் மீட்ட சக மாணவர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து தற்கொலை முயற்சி செய்த மாணவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
 
கல்லூரி விடுதியில் ராகிங் - தூக்க மாத்திரை சாப்பிட்டு மாணவர் தற்கொலை முயற்சி
 
இதுகுறித்து தருமபுரி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில் கடந்த 23ஆம் தேதி இரவு விடுதியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ராக்கிங் செய்ததும், அதில் சரவணனை முட்டி போட வைத்து தெரியவந்துள்ளது. மேலும் அரை நிர்வாணமாக நிறுத்தி ராக்கிங் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மருத்துக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தருமபுரி மருத்துவ கல்லூரி நிர்வாகம் உள்ளூர் மாணவர்களுக்கு ஆதராவாக செயல்பட்டு வருகிறது. எந்த புகார் கொடுத்தாலும் கநடவடிக்கை எடுக்காமல் மூடி மறைத்து வருகின்றனர். இவ்வாறு இருக்காமல், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
 
கல்லூரி விடுதியில் ராகிங் - தூக்க மாத்திரை சாப்பிட்டு மாணவர் தற்கொலை முயற்சி
 
இதுதொடர்பாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்ற நான்கு மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் ஒரு வார காலத்திற்கு நான்கு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து விடுதி காப்பாளர்களை மாற்ற வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, புதிதாக இரண்டு காப்பாளர்களை தேர்வு செய்ய உள்ளதாகவும், தினந்தோறும் விடுதியில் ஒரு மருத்துவரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
Embed widget