மேலும் அறிய
Advertisement
தருமபுரி: யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை - மின்வேலி அமைக்க வனத்துறைக்கு கோரிக்கை
காரிமங்கலம், பாலக்கோடு அருகே அடிக்கடி கிராமப் பகுதிக்குள் படையேடுக்கும் யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் வேதனை.
காரிமங்கலம், பாலக்கோடு அருகே அடிக்கடி கிராமப் பகுதிக்குள் படையெடுக்கும் யானைகளால் விவசாய தொழில் செய்ய முடியாததால் மின்வேலி அமைக்க விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பன்னர்கட்டா வனப்பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்ட யானைகள் ஆண்டுதோறும் மே மாதங்களில் உணவு தண்ணீர் தேடி ஒகேனக்கல் மற்றும் அஞ்செட்டி வனப்பகுதிகளுக்கு வந்து மீண்டும் அந்த யானைகள் கர்நாடகா வனப்பகுதிக்குள் சென்று விடும். அதே போல் இந்தாண்டும் 100க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல், பென்னாகரம் மற்றும் அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிக்கு வந்தது. வனப்பகுதியில் மழை பெய்யாததால் யானைகளுக்கு தேவையான உணவு தண்ணீர் தொடர்ந்து கிடைத்ததால், யானைகள் கர்நாடகா மாநிலத்திற்கு திரும்பி செல்லாமல் வனப்பகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்கு அடிக்கடி சென்று உணவு தண்ணீருக்கு செல்லும் போது விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனை வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி விட்டாலும் தொடர்ந்து யானைகள் கிராமப்பகுதிக்கு படையெடுக்க துவங்கி உள்ளது. அதே போல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக மூன்று காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது. கிராமங்களில் நுழைந்து விவசாய நிலங்களில் உள்ள கரும்பு, வாழை போன்ற பயிர்களை அழித்து விடுகிறது. மேலும் நெல், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மிதித்து துவம்சம் செய்து விட்டு மீண்டும் வன பகுதிக்குள் சென்று விடுகிறது. இந்நிலையில் தற்போது பாலக்கோடு அடுத்த மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் காரிமங்கலம் அடுத்த முதலைப்பட்டி, எலுமிச்சனஅள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 3 காட்டு யானைகள் முகாமிட்டு அங்குள்ள விளை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
அந்த யானைகளை வனத் துறையினர் மற்றும் பொதுமக்களும் பட்டாசு வெடித்து வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் விரட்டும் போது, வனப்பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. ஆனால் மீண்டும் கிராம பகுதிக்குள் நுழைந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. தற்போது இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் விவசாயம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், யானைகள் தற்போது விளை நிலங்களை சுற்றி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வெளியே வராமல், அச்சத்துடன் வீடுகளிலியே தங்கி உள்ளனர். இதனால் விவசாய தொழில் பாதிக்கப்படுவதாகவும். அடிக்கடி வரும் யானைகள் கிராமப் பகுதிக்குள் வராமல் இருக்க மின்வேலி அமைக்க வேண்டும் என வனத் துறையினருக்கு கோரி்க்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion