மேலும் அறிய
Advertisement
மொரப்பூர் அருகே இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி; எந்த நேரத்திலும் விழலாம் - மக்கள் அச்சம்
மொரப்பூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி. அதே தொட்டியில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சம்.
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த பாளையம்பள்ளி ஊராட்சியில் போளையம்பள்ளி, பொம்பட்டி, மாரப்பநாயக்கன்பட்டி, சுந்தரம் பள்ளி, ஜடையம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் போளையம்பள்ளி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் தற்பொழுது ஒகேனக்கல் குடிநீர் நிரப்பப்பட்டு, பொதுமக்களுக்கு தினசரி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முழுவதும் ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டு, கம்பிகள் தெரிகின்ற வகையில் இருந்து வருகிறது.
மேலும் விரிசல்கள் அதிகப்படியாக இருப்பதாலும், அதே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருவதால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்து வருகிறது. மேலும் அரசு பள்ளிக்கு அருகில் இருப்பதால் இடைவேளை நேரங்களில் பள்ளி மாணவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழலில் இருந்து வருவதால், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டித் தர வேண்டும். மேலும் போதிய அளவில் தண்ணீரை தினமும் விநியோகம் செய்ய வேண்டும் என பல்வேறு அரசு அலுவலர்களிடத்தில், கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர். இதுவரை மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்காக கொடுத்த மனுக்களின் மீது அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கீழே விழுந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. எனவே இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி விட்டு, புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட திட்ட அலுவலர் தீபனா விஸ்வேஸ்வரியிடம் கேட்டபோது, தருமபுரி மாவட்டத்தில் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு, பழுதாகி உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக ஆய்வு செய்து கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மாற்றுவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு தேவையான நிதி அரசிடமிருந்து ஒதுக்கப்படவில்லை. அந்த நிதி ஒதுக்கப்பட்டவுடன் இது போன்று, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் அப்புறப்படுத்தி விட்டு புதிதாக கட்டப்படும்”என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion