மேலும் அறிய
Advertisement
தருமபுரி: மழை வெள்ளத்தால் மூன்று புறமும் தண்ணீர் சூழ்ந்து தீபகற்பமான அரூர்
அரூர் பகுதியில் இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெளியேற நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை
தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சி 18 வார்டுகளில் பெரியார் நகர், தில்லைநகர், கோவிந்தசாமி நகர பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு காடுகளாகவும், மழைநீர் வழிந்தோடும் கால்வாய் பகுதியாக இருந்தது. இந்த பகுதில் வெளியேறும் மழைநீரும், அரூர் பெரிய ஏரியின் உபரி நீரும் நகரின் ராஜா கால்வாயில் கலந்து பாய்ந்தோடி வாணி ஆற்றில் கலக்கும். தற்போது வடகிழக்கு பருவமழையால் தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதில் அரூர், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் அளவுக்கு அதிகமான மழை பெய்துள்ளது. மேலும் வள்ளிமதுரை, வாணியாறு அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால் 15 ஆண்டுகளுக்கு பிறகு அரூர் வாணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
இதேபோல் மறுபுறம் வாணியாறு அணையில் இருந்து வரும் உபரி நீரால், அரூர் பெரிய ஏரி நிரம்பி வருகிறது. மேலும் அரூர் மேட்டுத்தெரு, கோவிந்தசாமி நகர், பாரதியார் நகர் கொளகம்பட்டி வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், ராஜ கால்வாயை ஆக்கிரமிப்பால் வெளியேற வழியில்லாமல் அரூர் பெரியார் நகர், தில்லை நகர், பாரதியார் நகர், திருவிக நகர், குபேந்திரன் நகர் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், அதன் பின்புறம் மற்றும் வயல்வெளிகளிலும் தேங்கி நிற்கிறது. இந்த வடகிழக்கு பருவமழை காரணமாக அரூர் பகுதியில் ஒரு புறம் வாணியாற்றில் வெள்ளப் பெருக்கு மறுபுறம் பெரிய ஏரியில் முழுவதும் தண்ணீர் நிரம்பியும் மற்றொரு புறம் வெள்ள நீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு மற்றும் வயல் பகுதிகளில் தண்ணீர் தேங்கி மூன்று பக்கங்களும் தண்ணீரால் சூழ்ந்து தீபகற்பம் போல் காட்சி அளித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் மழை நீரில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராஜகால்வாய் ஆக்கிரமிப்பை, சட்டமன்ற உறுப்பினர் வர.சம்பத்குமார், வருவாய் கோட்டாட்சியர் வே.முத்தையன் உள்ளிட்டோர் நேரடியாக வந்து ஆய்வு செய்து தற்காலிகமாக அகற்றியுள்ளனர். ஆனால் அரூர் பகுதியில் இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெளியேற நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள், தண்ணீர் கால்வாய்களின் வழியாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரூர் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion