மேலும் அறிய
தருமபுரி: அரூர் அருகே உணவகத்தின் கல்லாபெட்டியை உடைத்து 1.82 லட்சம் கொள்ளை - ஊழியர் தலைமறைவு
’’உணவகத்தில் பணியாற்றி ஊழியரே கடையின் கல்லாப் பெட்டியை உடைத்து பணம் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது’’
![தருமபுரி: அரூர் அருகே உணவகத்தின் கல்லாபெட்டியை உடைத்து 1.82 லட்சம் கொள்ளை - ஊழியர் தலைமறைவு Dharmapuri: 1.82 lakh robbery at restaurant near Arur - Employee absconding தருமபுரி: அரூர் அருகே உணவகத்தின் கல்லாபெட்டியை உடைத்து 1.82 லட்சம் கொள்ளை - ஊழியர் தலைமறைவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/0e0735ac02443f3c7e280e5ac3c4efd6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கல்லாப்பேட்டியில் பணம் திருடும் ரிஸ்வான்
தருமபுரி மாவட்டம் அரூர் 4 ரோட்டில் பாலமுருகன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒரு சிலர், இரவு நேரங்களில் உணவகத்திலேயே தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவர் உணவகத்தில் பயணிக்கு சேர்ந்துள்ளார். தொடர்ந்து புதிதாக பணிக்கு சேர்ந்த ரிஸ்வான் என்பவரும் இரவு நேரத்தில் உணவகத்திலே தங்கி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் மூன்றாம் தேதி இரவு வழக்கம்போல உணவகத்தில் பணி எல்லாம் முடித்துவிட்டு, காலையில் ஊழியர்கள், மளிகை கடைக்கு கொடுப்பதற்கான பணம், சீட்டு பணம் 80,000 உள்ளிட்ட 1.82 லட்சம் பணத்தை பாலமுருகன் கடையின் கல்லா பெட்டியில் வைத்துள்ளார். தொடர்ந்து காலையில் எல்லோருக்கும் கொடுத்து விட்டு வெளியூர் செல்வதாக திட்டமிட்டு இருந்துள்ளார்.
![தருமபுரி: அரூர் அருகே உணவகத்தின் கல்லாபெட்டியை உடைத்து 1.82 லட்சம் கொள்ளை - ஊழியர் தலைமறைவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/e0cdaf527515608f45c2e4e4ee7b1099_original.jpg)
இந்நிலையில் புதன் கிழமை இரவு உணவகத்தின் பணியாற்றிய ரிஸ்வான் மற்றும் அஜித் இருவரும் இரவு ஒரு மணிவரை மது அருந்திவிட்டு உறங்கியுள்ளனர். தொடர்ந்து வழக்கம்போல் தீபாவளி அன்று காலை பாலமுருகனின் தாய் முருகேஸ்வரி உணவகத்தை திறந்துள்ளார். அப்பொழுது உணவகத்தில் இருந்த கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து மகன் பாலமுருகன் இடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அப்பொழுது வந்து பார்த்த பொழுது கல்லா பெட்டியில் இருந்த ரூ.1.82 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
![தருமபுரி: அரூர் அருகே உணவகத்தின் கல்லாபெட்டியை உடைத்து 1.82 லட்சம் கொள்ளை - ஊழியர் தலைமறைவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/06/fc271c0a06ef94ded4870019b616b266_original.jpg)
மேலும் கடையில் பணியாற்றிய அஜித், ரிஸ்வான் இருவரில் ரிஸ்வான் தலைமறைவாகியுள்ளார். இதனை தொடர்ந்து உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் அதிகாலை 4 மணிக்கு ரிஸ்வான் கடையின் கல்லாப் பெட்டியை உடைத்து பணம் எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து கல்லாப் பெட்டியை திறந்து உடைத்து பணம் எடுத்த ரிஸ்வான் மீது பாலமுருகன் அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்பொழுது உணவகத்தில் பணியாற்றி ஊழியரே கடையின் கல்லாப் பெட்டியை உடைத்து பணம் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அரூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உணவகத்தில் பணியாற்றியவரே கடையில் கல்லா பெட்டியை உடைத்து ரூ.1.82 இலட்சம் பணம் திருடி சென்ற சம்பவம் அரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion