சேலம் மாவட்டத்தில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்திலேயே அதிக படியாக சேலம் மாவட்டத்தில் 168 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் அதிகப்படியாக சேலம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை . மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1524 ஆக உள்ளது. மேலும் 208 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை சேலம் மாவட்டத்தில் 88,388 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 91,694 ஆக உயர்வு. மாவட்டத்தில் 1,787 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 சதவீத படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக டோக்கன் முறையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.இதனிடையே, சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கான சிறப்பு முகாம் நேற்றும், இன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட அளவில் 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஒரு அரசு மருத்துவமனையில் முகாம் நடைபெறுகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு என 10600 தடுப்பூசி இருப்பு உள்ளது.
கோவிஷீல்டு கோவாக்சின் என இரண்டு தடுப்பு மருந்துகளும் போடப்படுகின்றன. தடுப்பூசி போட வரும் கர்ப்பிணி பெண்கள் தாய் சேய் நல பாதுகாப்பு அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் பெண்கள் முக கவசம் அணிதல் உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 71 ஆயிரத்து 380 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாளை தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கொரோனா பதிவு : தர்மபுரி மாவட்டத்தில் இன்று புதிதாக 36 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழப்பு. மேலும் 77 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் 604 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நோய் தொற்று குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து இன்று ஒரே நாளில் 35 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை. நோயிலிருந்து குணமடைந்த 67 பேர் வீடு திரும்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 582 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )