மேலும் அறிய

சேலம் அரசு அலுவலங்கங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 62 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

’’62 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில் கிராம நிர்வாக அலுவலர் உட்பட 2 பேர் கைது’’

சேலத்தில் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவனர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத 62 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மற்றொரு பகுதியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்பு பிரிவினர் கைது செய்தனர்.

சேலம் அரசு அலுவலங்கங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 62 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்பு பிரிவினருக்கு  ரகசிய புகார் வந்துள்ளது. அதன்பேரில் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த அதிரடி சோதனையில் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 62 ஆயிரம் மற்றும் சந்தேகத்திற்குரிய சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சார்பதிவாளர் இந்துமதி மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் பத்திர பதிவுற்கு கூடுதல் பணம் பெறப்பட்டுள்ளதா, பணத்திற்காக பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் காவேரி. கோவை மண்டலத்தில் சர்வாதிகாரி போல் செயல்பட்டு வந்த செல்வகுமார் சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவை மண்டலத்தில் இவரை மீறி சாதாரண ஊழியர் முதல் டிஐஜிக்கள் வரை அவருக்கு வேண்டியவர்கள் அல்லது அவரால் மேலிடத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள விஐபிக்களுக்கு சொத்துக்கள் வேறு நபர்களுக்கு மாற்றப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அரசு அலுவலங்கங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - 62 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

இதேபோல் சேலம் பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தாத்தா பெயரில் உள்ள நிலத்தின் பட்டாவை தந்தையின் பெயருக்கு மாற்றம் செய்வது குறித்து ஏர்வாடி வாணியம்பாடி கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி மற்றும் உதவியாளர் உதயகுமாரை அணுகியுள்ளார். அப்போது லஞ்சம் கேட்பதால் செல்வகுமார் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை பிரிவு அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி மற்றும் உதவியாளர் உதயகுமார் ஆகியோர் புகார்தாரர் இடமிருந்து 3500 ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்றபோது  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலர்களால் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் பீதியடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
எல்லாமே தளபதி மேஜிக்தான்! சேலத்து வண்டி வேடிக்கையில் கெத்து காட்டிய அமெரிக்க விஜய் ரசிகர்!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!
சரசரவென உயரும் மேட்டூர் அணை? ஒரே நாளில் நீர்வரத்து அதிரடி உயர்வு... லேட்டஸ்ட் நிலவரம் இதோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget