மேலும் அறிய

Crime: மனைவிக்காக மல்லுகட்டிய 3வது, 4வது கணவன்கள்! மருதமலை பட காமெடி பாணியில் நடந்த உண்மை சம்பவம்!

மருதமலை பட பாணியில் மனைவியை தன்னுடன் சேர்த்து வருமாறு 3வது மற்றும் 4வது கணவன்கள் முறையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருதமலை திரைப்படத்தில் வந்திருந்த நடிகர் வடிவேலு காமெடியை போன்ற சம்பவம் சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் நடந்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் புகார் கொடுத்தார். அதில் கடந்த 28 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கேரளா மாநிலம் பாலக்காடு செல்வதற்காக சேலம் ரயில்வே ஜங்ஷனில் மனைவியோடு வந்திருந்தேன்.

பணம், நகையுடன் மாயம்:

பாத்ரூம் செல்வதாக கூறிச் சென்ற மனைவி புஷ்பா காணவில்லை. அவரை எனது அம்மாவின் 20 பவுன் நகை ரூபாய் 15,000 பணத்தோடு மாயமாகிவிட்டார். அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகார் மனுவை அளித்தார். 

Crime: மனைவிக்காக மல்லுகட்டிய 3வது, 4வது கணவன்கள்! மருதமலை பட காமெடி பாணியில் நடந்த உண்மை சம்பவம்!

இதனை ஏற்று புஷ்பா மாயமானதை வழக்காக பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதனை அடுத்து காவல்துறையினரின் தீவிர விசாரணை நடத்தி தேடி வந்த நிலையில், அந்த பெண் மதுரையில் ஒரு கட்டடிடத் தொழிலாளியோடு குடும்ப நடத்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை மதுரைக்கு அனுப்பி அந்த இளம் பெண்ணை மீட்டு சேலம் அழைத்து வந்தனர்.

கிறுகிறுத்துப் போன போலீசார்:

அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் காவல்துறையினரையே அந்த இளம் பெண் கதிகலங்க வைத்து விட்டார். "புஷ்பா உன் கணவரை விட்டு ஏன் ஓடிச் சென்றாய்" என விசாரித்த போது, அந்தப் பெண் என்னை காணவில்லை என புகார் கொடுத்தவன் உண்மையான கணவனே இல்லை. என்னோட மூன்றாவது கணவன். ஒரு வருஷமாக அவனுக்கு அடைக்கலம் கொடுத்து கூட வச்சிருந்தேன். இது மட்டும் தான் என காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முதலாவதாக ஆத்தூரைச் சேர்ந்த ஒரு கட்டிட தொழிலாளியை திருமணம் செய்த அந்த பெண் இரண்டு மகன்கள் ஒரு மகள் என கணவரோட குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துள்ளார். மூன்று குழந்தைகளும் கணவருடன் வளர்ந்து வருகின்றன. பிறகு கட்டிட வேலைக்கு சென்ற இடத்தில் வேறு வேறு நபர்களுடன் பழகி வாழ்ந்திருக்கிறார். கடைசியாக கேரளா மாநிலம் பாலக்காட்டில் வேலை பார்த்தபோது கடலூரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளிடம் பழகி அவருடன் ஓராண்டுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்துள்ளார். 

Crime: மனைவிக்காக மல்லுகட்டிய 3வது, 4வது கணவன்கள்! மருதமலை பட காமெடி பாணியில் நடந்த உண்மை சம்பவம்!

இதனை அடுத்து கடந்த மாதத்தில் சேலம் ரயில் நிலையத்தில் நடக்கும் கட்டுமான பணிக்கு இருவரும் வேலைக்கு வந்துள்ளனர். அப்பொழுது மதுரை சார்ந்த கட்டிட தொழிலாளுடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் சம்பவத்தன்று மூன்றாவதாக வாழ்ந்து வந்தவரை ரயில் நிலையத்தில் விட்டு விட்டு மதுரைக்காரருடன்  சென்றுள்ளார். அவர் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழும் நபர் என்பதால் இருவரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

வழக்கு முடிந்தது எப்படி?

மனைவி மாயமாகி விட்டார் என புகார் கொடுத்ததால், அப்பெண்ணை பிடித்து வந்து விசாரித்தனர். 20 பவுன் நகை பணம் எதையும் அவர் எடுத்துச் செல்லவில்லை என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. கடைசியாக அந்த இளம் பெண்ணை காணவில்லை என புகார் கொடுத்த மூன்றாவது கணவரோடு செல்ல முடியாது. இனி மதுரக்காரருடன் தான் வாழ்வேன் என்று அடம் பிடித்துள்ளார்.

அதே நேரம் புகார் கொடுத்த நபர் எப்படியாவது என்னோடு அனுப்பி வையுங்க என காவலர்களிடம் கெஞ்சினர். அவருக்கு காவல்துறையினர் அறிவுரை கூறு எப்படியாவது மிஸ்ஸிங் கேஸை முடித்து விட வேண்டும் என்ற என்று அப்பெண்ணை சேலத்தில் உள்ள காப்பகத்தில் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி விசாரணை செய்ததில் அங்கு மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்த நபரும் வரவில்லை. இதனால் அந்த பெண் விருப்பப்பட்டவருடன் செல்வதாக தெரிவித்தார். உடனடியாக நீதிமன்றம் வழக்கை முடித்து அப்பெண்ணை அனுப்பி வைத்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK ELECTION PLAN: கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
Embed widget