மேலும் அறிய

CM Stalin Speech:"நான் இருக்கிறேன்; எதற்கும் கவலைப்படத் தேவையில்லை" - முதலமைச்சர் ஸ்டாலின்

ஒன்பது ஆண்டுகாலம் ஒன்றிய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்றும் முதல்வர் பேச்சு.

சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியது, "தெம்போடு ஒரு இறுமாப்போடு நான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன். நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடிய சூழலில் முதல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டமாக சேலம் மாவட்ட கூட்டம் அமைந்திருக்கிறது. தொண்டனுக்கு தொண்டனாக இருந்து களத்தில் முதல் போர் வீரனாக இருந்து மறைந்த வீரபாண்டியார் இருந்த சேலம் மாவட்டத்தில் இந்தக் கூட்டம் நடக்கிறது. சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவான ஊர் இந்த சேலம். அண்ணா அவர்களால் கொண்டு வரப்பட்ட அண்ணாத்துரை தீர்மானம் தான் சேலத்தில் திராவிடர்கழகத்தை உருவாக்கியது. சமூக சீர்திருத்த எண்ணங்களை செயல்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. கனல் மிகுந்த வசனங்களை கலைஞர் எழுதியுள்ளார். எனவே என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஊர் சேலம். 1997-ம் ஆண்டு சேலத்தில் திமுக மாநாடு நடந்தது. ஊர்வலத்திற்கு தலைமை தாங்கும் மிகப்பெரிய பெருமையை வீரபாண்டியார்  எனக்கு கொடுத்தார். மாலை 5 மணிக்கு தொடங்கிய பேரணி விடிய விடிய நடந்தது. அப்படிப்பட்ட மாபெரும் பேரணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை எண்ணி பெருமைப்படுகிறேன். மூன்று நாள் மாநாட்டில் ஒரு நாள் முழுக்க இளைஞர் அணி நடத்தியது. 2004-ம் ஆண்டு மாநாட்டில் கட்சிக் கொடியேற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நினைவலைகளில் நீந்தி உங்கள் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.

கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஊர்கள் தோறும் திமுக என்ற தலைப்பில் கட்சி கொடிக்கம்பங்களை புதுப்பித்தல், கழகமே குடும்பம் என்ற தலைப்பில் கட்சி நிர்வாகி குடும்பங்களுக்கு உதவிட வேண்டும், என்றென்றும் கலைஞர் என்ற பெயரில் கலைஞரின் சிறப்புகளை பட்டிமன்றம் நடத்த வேண்டும், எங்கெங்கும் கலைஞர் என்ற பெயரில் வாய்ப்புள்ள இடங்களில் சிலை அமைப்பது, கலைஞர் பெயரில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய படிப்பு மையம் அமைப்பது என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவின் போதுதான் நாம் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். 40 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு அச்சாரமாக இந்தக் கூட்டம் அமைந்துள்ளது. அதிலும் நிச்சயம் சேலத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற வேண்டும். அதற்காகத்தான் முதன்மைச் செயலாளர் நேருவை இங்கு அனுப்பியுள்ளேன். அவர் தேர்தலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர். உங்களை பார்த்தவுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை கிடைத்து விட்டது. நாளை நமதே நாற்பதும் நமதே என்பதை உரக்க சொல்ல சேலம் வந்துள்ளேன். 10 ஆண்டு காலம் தமிழகத்தை பாழ்படுத்திய அதிமுகவை அகற்றி விட்டு மக்கள் நம்மிடம் ஆட்சியை கொடுத்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் திமுக கட்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு வந்த பிறகு கட்சிப் பணிகள் மந்தமாகும் சூழ்நிலை திமுகவில் இல்லை. ஒவ்வொருவரும் உறக்கமின்றி பாடுபட்டு வருகின்றனர். அந்த உழைப்பின் பலனாக 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களை நேரடியாக சந்தித்து பேச உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கட்டமைப்பு கொண்ட கட்சி உலகத்திலேயே எங்கும் இல்லை.

 CM Stalin Speech:

திமுகவை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்ற சூழ்நிலையை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உருவாக்கி கொண்டிருக்கிறேன். உங்கள் உழைப்பின் பலன் உங்களை வந்து சேரும். நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. கட்சி வளர்ச்சி, ஆட்சி பொறுப்பில் இருப்பதால் தமிழகத்தின் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு தானே என அலட்சியமாக இருக்க கூடாது. பாஜக செல்வாக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு சரிந்து வருகிறது. அதற்காக அவர்களை எதை வேண்டுமானால் செய்வார்கள். கர்நாடக நிலை தொடர்ந்தால் முன்கூட்டியே தேர்தலை நடத்த வாய்ப்புள்ளது. எதற்கும் தயாராக இருக்க வேண்டும். அமித்ஷா சென்னை வருவது பரபரப்பு செய்திகளாக வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது தெரிகிறது. கடந்த 9 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்புத் திட்டங்களை பட்டியலிட்டு சொல்ல வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு அமித்ஷா தயாராக இருக்கிறாரா. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது ஏராளமான திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவடைய திமுகதான் காரணம். மத்திய அரசின் நிதியில் 11 சதவீத நிதியை தமிழகத்திற்கு கொண்டு வந்த பெருமை திமுகவுக்குத்தான் உள்ளது. தமிழை செம்மொழியாக்கியது, 56 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. ஒரகடத்தில் 496 கோடி மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. 1553 கோடி மதிப்பில் சேலம் உருட்டாலை சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டது. தாம்பரத்தில் தேசிய சித்த ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, 1550 கோடி மதிப்பில் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், சேது சமுத்திர திட்டம், சென்வாட் வரி நீக்கம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பொடா சட்டம் ரத்து, மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகல ரயில்பாதைகளாக மாற்றியது, ரயில்வே மேம்பாலங்கள், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், கடல் சார் பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் , உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா என எண்ணற்ற பணிகளை செய்துள்ளோம். இதுபோன்றதொரு பட்டியலை உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட தயாரா அந்த தைரியம் ஆற்றல் அவருக்கு வருமா, வராது. 2015ம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுவரைக்கும் மருத்துவமனை கட்டப்படவில்லை. அதே நேரத்தில் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கட்டப்படவில்லை. தமிழ்நாட்டில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மனமில்லாத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு அமித்ஷா பதில் சொல்ல வேண்டும். பாஜக தமிழகத்திற்கு கொடுத்தது நீட், தமிழ் புறக்கணிப்பு, குடியுரிமை சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் உரிமை பறிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு தான் பாஜக அரசு கொடுத்தது.

 

கொத்தடிமைக் கூட்டமான அதிமுகவை நம்பி பாஜக வருகிறது. ஜெயலலிதாவிற்கு பிறகு தோல்வியை மட்டுமே பெற்ற கட்சி அதிமுக. ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி, சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி. தோல்வி மேல் தோல்வி அதிமுகவிற்கு கிடைத்துள்ளது. பாஜகவுக்கு பல்லக்கு தூக்கி தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி. மக்கள் வெள்ளத்தில் அதிமுக பாஜக இருவரும் அடித்து செல்லப்படுவது உறுதி. திமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொருவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயனடைந்து வருகின்றனர். மகளிர் இலவச பேருந்து திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு, காலை சிற்றுண்டி, புதுமைப் பெண் திட்டம், நம்மைக் காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை வரும் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளில் வழங்கப்படும். திமுக ஆட்சியின் சாதனைகளை நிர்வாகிகள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலமே மக்கள் செய்திகளை தெரிந்து கொள்கிறார்கள். எனவே திமுக நிர்வாகிகள் சமூக வலைத் தளங்களில் கணக்கை தொடங்க வேண்டும். செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எதிர்முகாமில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்திகளை முடக்க வேண்டும். தாய் கழகத்தில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு துணை அமைப்புகளில் வாய்ப்பு வழங்கிட வேண்டும். மாவட்ட அளவில் மட்டுமே பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு கணிசமாக பொறுப்புகளை வழங்க வேண்டும். திமுகவினரை அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் மகிழ்ச்சியோடு வைத்திருக்க வேண்டும். திமுக தொண்டர்களை கவனித்து குறையை தீர்த்து வைக்க வேண்டும். குறையை தீர்க்க முடியாவிட்டாலும் காது கொடுத்தாவது கேட்க வேண்டும். நம்முடைய குடும்பம் போல கட்சி இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்க தேவையானதை செய்யவேண்டும். தேசிய அளவில் திராவிட மாடல் ஒங்கி ஒலித்து கொண்டிருக்கிறது. தெற்கில் இருந்து குரலை வடக்கே இருப்பவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யார் வந்தாலும் நாங்கள் பயப்பட போவதில்லை. உறுதியோடு இருந்து களப்பணியாற்றிட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவில் ஜனநாயகத் திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்" என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget