மேலும் அறிய
Advertisement
ABP Nadu Impact: ஒகேனேக்கல்லில் பாதுகாப்பு உடையின்றி பரிசல் பயணம் - 3 பேரின் உரிமம் ரத்து
பாதுகாப்பு உடை அணியாமல் பரிசல் ஓட்டிகள் அழைத்துச் சென்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி எச்சரிக்கை
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்து அருவிகளில் குளித்தும், பரிசல் பயணம் செய்து, அருவியின் அழகை கண்டு ரசித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் பரிசல் பயணம் செய்வதற்கு பாதுகாப்பு உடை அணிந்து பரிசல் பயணம் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஒருசில பரிசல் ஓட்டிகள் சுற்றுலா பயணிகளை பாதுகாப்பு உடை அணியாமல் அழைத்துச் செல்கின்றனர். அதேபோல் ஒரு சில சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை பெற்றுக் கொண்டு, அதனை அணியாமல் பரிசலில் வைத்துவிட்டு, ஆபத்தினை அறியாமல் பயணம் செல்கின்றனர்.
தொடர்ந்து காவிரி ஆற்றில் ஆபத்தான முறையில் பாதுகாப்பு உடை அணியாமல் பரிசலில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வது குறித்து, நமது ஏபிபி இணைய தளத்தில செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, பாதுகாப்பு உடை அணியாமல் பரிசல் பயணம் செய்வது குறித்து உடனடியாக ஆய்வு செய்து, அறிக்கை வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஒகேனக்கல்லில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்பொழுது பரிசல் பயணத்தில் பாதுகாப்பு உடை அணியாமல் சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பரிசல் ஓட்டிகள் அலுவலர்கள் விசாரணை நடத்தினர். இதில் பாதுகாப்பு உடை அணியாமல், ஆபத்தான முறையில் சுற்றுலா பயணிகளை பரிசலில் அழைத்து சென்ற தருமன், வெங்கடேசன், ஸ்ரீரங்கன் ஆகியோர் என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ஆபத்தான முறையில் பாதுகாப்பு உடை அணியாமல் சுற்றுலா பயணிகளை பரிசல் பயணத்தில் அழைத்துச் சென்ற, தருமன், வெங்கடேசன், ஸ்ரீரங்கன் ஆகிய மூன்று பேரின் பரிசல் உரிமத்தினை ரத்து செய்ய, அலுவலர்களுக்கான மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர். தொடர்ந்து பாதுகாப்பில்லாமல், ஆபத்தான முறையில் சுற்றலா பயணிகளை அழைத்து சென்ற மூன்று பரிசல் ஓட்டிகளின் உரிமத்தினை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி நடவடிக்கை எடுத்தார்.
மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக பாதுகாப்பு உடை அணிய வேண்டும். ஆனால் பாதுகாப்பு உடை அணியாத சுற்றுலா பயணிகளை பரிசலில் ஏற்றக் கூடாது. அவ்வாறு பாதுகாப்பு உடை அணியாமல் பரிசல் ஓட்டிகள் அழைத்துச் சென்றால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி எச்சரிக்கை விடுத்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion