பாலியல் தொழிலாளியிடம் செல்போனை பறிகொடுத்த வாலிபர் தற்கொலை முயற்சி - சேலத்தில் பரபரப்பு..!
காவல்துறையினர் பாலியல் தொழிலாளியை அழைத்து விசாரித்து அவரிடமே செல்போனை கொடுத்து அனுப்பி விட்டனர்.
பாலியல் தொழிலாளியிடம் பறி கொடுத்த செல்போனை காவல்துறையினர் மீட்டுக் கொடுக்க மறுப்பதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள புளிய மரத்தின் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சியில் உள்ள நாராயண நகர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ். இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது புதிய பேருந்து நிலையத்தில் பாலியல் பெண் தொழிலாளிடம் சென்றுள்ளார். அப்போது இவரிடம் பணம் ஏதும் இல்லாததால் பாலியல் பெண் தொழிலாளி அவருடைய 1500 ரூபாய் மதிப்புள்ள செல்போனை எடுத்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் தன்னுடைய செல்போனை பாலியல் பெண்ணிடமிருந்து மீட்டுத் தர சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளப்பட்டி காவல் துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் அப்பெண்ணை அழைத்து விசாரித்து அவரிடமே செல்போனை கொடுத்து அனுப்பி விட்டனர். இதனால் பறிகொடுத்த செல்போனை சேலம் பள்ளப்பட்டி காவல் துறையினர் அப்பெண்ணிடமே கொடுத்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள புளிய மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
வாலிபரை மீட்க மரத்தின் மீது ஏற முயன்ற காவல் துறையினரை மரத்தின் மீது ஏறினால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டினார். மேலும் தன்னுடைய செல்போனை காவல்துறையினர் மீட்டு தர வேண்டும் என கூறிய நிலையில் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்பு மரத்திலிருந்து கீழே இறங்கி சென்றார். இந்நிலையில் மரத்தின் மீது ஏறியதால் ஏற்பட்ட காயம் காரணமாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி அளிக்கப்பட்டு பின்னர் சேலம் டவுன் காவல் துறையினர் பிரகாஷை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்