மேலும் அறிய
Advertisement
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் 78 லட்சத்தில் தார் தளம் அமைக்கும் பணி துவக்கம்
பணிகள் முழுமையாக முடிந்து 26.01.22 அன்று காலை முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என நகராட்சி துறையினர் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. தருமபுரி பேருந்து நிலையத்திற்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் பேருந்து பயணம் செய்ய தினமும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேருந்து நிலைய புதுப்பிக்கப்பட்டதால், பேருந்து முழுவதும் தரைத்தளம் குண்டும் குழியுமாக காணப்பட்டது. பொதுமக்கள் தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்த தளத்தை புதிதாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மத்திய 15வது நிதி ஆணையம் குழுவில் இருந்து ரூபாய் 78 லட்சம் மதிப்பீட்டில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் புதிதாக தார் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிறு ஒரு நாள் ஊரடங்கு தினத்தில் தரை தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
மேலும் பேருந்து நிலைய பணி நடைபெறுவதால், பொதுமக்களுக்கு இடையூறு இருக்கும் என்பதால், முழு ஊரடங்கு நாளானான நேற்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய தார் தளம் அமைக்கப்படும் பணி முடியும் வரை, புறநகர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் சேலம், பெங்களூரு, திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கிருஷ்ணகிரி, ஓசூர், அரூர், ஒகேனக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் மற்றும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். அங்கு சென்று பயணிகளை பேருந்தில் ஏறிச் செல்லலாம்.
மேலும் நகர பேருந்துகள் அனைத்தும், புறநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூங்கா பகுதியிலிருந்து தற்காலிகமாக இயக்கவும், பேருந்து ஏற பயணிகள் குழப்பம் இல்லாமல் சென்று பயணம் செய்ய தேவையான வசதிகளோடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து புறநகர் பேருந்து நிலையத்தில் புதிய தார் தளம் அமைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் புறநகர் பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளை 23.01.22 முதல் 25.01.22 மாலை வரை முழுமையாக அடைத்து ஒத்துழைப்பு கொடுக்கமாறு, நகராட்சி அதிகாரிகள் வணிகர்களுக்கு கடிதம் வழங்கி அறிவுறுத்தித்தியுள்ளனர். மேலும் பணிகள் முழுமையாக முடிந்து 26.01.22 அன்று காலை முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என நகராட்சி துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion