மேலும் அறிய

Raksha Bandhan 2024: அண்ணன் - தங்கை உறவை போற்றும் ரக்‌ஷா பந்தன்! எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது?

அண்ணன் - தங்கை உறவை போற்றும் ரக்‌ஷா பந்தன் விழா எப்போது கொண்டாடப்படுகிறது? ஏன் கொண்டாடப்படுகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

 இந்தியாவில் உறவு முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அண்ணன் – தங்கை உறவு பந்தமானது உன்னதமான உறவாக கருதப்படுகிறது. இதன் காரணமாக திரைப்படங்களில் கூட அண்ணன் – தங்கை உறவை மையமாக கொண்ட திரைப்படங்கள் பல மொழிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

அண்ணன் – தங்கை உறவை போற்றும் விதமாக வட இந்தியாவில் ரக்‌ஷா பந்தன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சமீபகாலமாக தமிழ்நாட்டிலும் ரக்‌ஷா பந்தன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ரக்‌ஷா பந்தன் எப்போது?

ரக்‌ஷா பந்தனானது வட இந்திய மாதமான ஷ்ரவண் மாதத்தில் வழக்கமாக கொண்டாடப்படுகிறது. அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி நன்னாளில் ரக்‌ஷா பந்தன் வழக்கமாக கொண்டாடப்படும். இந்தாண்டில் ஷ்ரவண் மாத பௌர்ணமி வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வருகிறது. இதனால், அன்றைய நாளில் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் தங்களது மூத்த சகோதரர்களுக்கு கைகளில் ராக்கி கயிறு கட்டிவிடுவது ரக்‌ஷா பந்தனில் வழக்கம் ஆகும். தங்களை பாதுகாக்கும் நபர் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் ராக்கி கயிறு கட்டப்படுகிறது. மேலும், ரக்‌ஷா பந்தன் தினத்தில் சகோதரர்களுக்கு கையில் ராக்கி கயிறு கட்டுவதுடன், அவர்களது நெத்தியில் ஆரத்தி எடுப்பது வழக்கம்.

எந்த நேரத்தில் கொண்டாடலாம்?

ரக்‌ஷா பந்தன் கொண்டாட ஆகஸ்ட் மாதம் 1.30 மணி முதல் இரவு 9.08 மணி வரை உகந்த நேரம் ஆகும். அந்த 7 மணி நேர 48 நிமிடங்களே ரக்‌ஷா பந்தன் கொண்டாட உகந்த நேரமாக கருதப்படுகிறது.

ரக்‌ஷா பந்தன் ஏன்  கொண்டாடப்படுகிறது?

பகவான் கிருஷ்ணரின் கரங்களில் சுதர்சன சக்கரம் இருக்கும். அந்த சக்கரத்தை பயன்படுத்தும்போது அவர் தனது விரலை வெட்டிக் கொண்டார். அப்போது, அந்த விரலில் ஏற்பட்ட காயத்தை திரௌபதி துணியால் வைத்து மறைப்பார். அப்போது, திரௌபதியிடம் எந்த சூழல் வந்தாலும் உனக்கு வரும் துயரில் இருந்து உன்னை பாதுகாப்பேன் என்று உத்தரவாதம் அளிப்பார்.

இதனால், கௌரவர்கள் திரௌபதியை சபையில் அவமானப்படுத்தும்போது கிருஷ்ணர் தோன்றி அவரை காப்பாற்றுவதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நினைவு கூறும் விதமாகவும், அண்ணன் – தங்கை உறவை போற்றும் விதமாகவும் ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget