மேலும் அறிய

காரைக்காலில் ஸ்தம்பித்த PRTC போக்குவரத்து: 70% பேருந்துகள் பணிமனையில் முடக்கம் - பொதுமக்கள் கடும் அவதி!

பராமரிக்க போதிய நிதியின்றி பணிமனையில் தஞ்சம் புகுந்த அரசுப் பேருந்துகளால் காரைக்கால் மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

காரைக்கால்: புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (PRTC) முதுகெலும்பாகக் கருதப்படும் அரசுப் பேருந்துகள், காரைக்கால் மாவட்டத்தில் அடுத்தடுத்துப் பழுதாகி பணிமனையில் முடங்கிக் கிடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உதிரிபாகங்கள் வாங்கக் கூட நிதியின்றி, நிறுவனம் தவித்து வருவதால் மாவட்டத்தின் 70 சதவீத போக்குவரத்து சேவை அடியோடு முடங்கி போய்யுள்ளது.

நிதி நெருக்கடியில் சிக்கிய போக்குவரத்துக் கழகம்

புதுச்சேரி அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.ஆர்.டி.சி, தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. பேருந்துகளின் சிறிய பழுதுகளைச் சரிசெய்யத் தேவையான உதிரிபாகங்கள், டயர்கள் மற்றும் என்ஜின் ஆயில் போன்ற அடிப்படைப் பொருட்களைக் கூட வாங்க நிதியின்றி நிர்வாகம் முடங்கிக் கிடப்பதே இந்த அவல நிலைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

70 சதவீதப் பேருந்துகள் முடக்கம்: வழித்தட வாரியான பாதிப்பு

காரைக்கால் மாவட்டத்தில் இருந்து சென்னை, நெய்வேலி, சிதம்பரம் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்குப் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பிரதான பயணத் தேர்வாக பி.ஆர்.டி.சி பேருந்துகள் இருந்து வருகின்றன. ஆனால், கடந்த ஒரு மாதமாக இந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் இயங்கி வந்த 33 பேருந்துகளில் தற்போது உதிரிபாகங்கள் கிடைக்காமல் ஒவ்வொன்றாகப் பணிமனையில் தஞ்சம் புகுந்துள்ளன. சிறிய பழுதுகளைக் கூட நீக்க முடியாத அவல நிலையில் அதிகாரிகள் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்பதால், பேருந்துகள் அனைத்தும் துருப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம் இயங்கி வந்த 33 பேருந்துகளில், தற்போது 20 பேருந்துகள் பழுதாகி பணிமனையில் முடங்கியுள்ளன. இதனால் வெறும் 30 சதவீதப் பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன. 

  • சென்னை வழித்தடம்: 5 பேருந்துகள்
  • சிதம்பரம் & நெய்வேலி: தலா 2 பேருந்துகள்
  •  மயிலாடுதுறை & கும்பகோணம்: தலா 1 பேருந்து
  • நகரப் பேருந்துகள் (Town Bus): 9 பேருந்துகள்

இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் மட்டுமின்றி, கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்கு வரும் மாணவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

துருப்பிடிக்கும் பேருந்துகள் – அதிகாரிகளின் இயலாமை

பழுதான பேருந்துகளைச் சரிசெய்து இயக்கினால் மட்டுமே நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கும் என்ற எளிய உண்மையை நிர்வாகம் உணரத் தவறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உதிரிபாகங்கள் கிடைக்காததால், பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் மழையிலும் வெயிலிலும் காய்ந்து துருப்பிடித்து வீணாகி வருகின்றன. அதிகாரிகளோ நிதி ஒதுக்கீடு இல்லாததால் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளனர்.

தனியார் பேருந்துகளின் ஆதிக்கம் மற்றும் கட்டணக் கொள்ளை

அரசுப் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால், அந்த வழித்தடங்களில் தனியார் பேருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. "அரசுப் பேருந்துகளை நம்பிப் பணிக்குச் செல்ல முடியவில்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் பேருந்துகள், சில நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக" பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் முதியவர்கள் குறைந்த கட்டணச் சேவையை இழந்து தவிக்கின்றனர்.

அரசுக்கு வலுக்கும் கோரிக்கை

காரைக்கால் மாவட்டத்தின் போக்குவரத்து முதுகெலும்பாக விளங்கும் பி.ஆர்.டி.சி-யைக் காப்பாற்ற புதுச்சேரி அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். போர்க்கால அடிப்படையில் நிதியை ஒதுக்கீடு செய்து, முடங்கிக் கிடக்கும் பேருந்துகளைச் சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா? அல்லது பி.ஆர்.டி.சி-யின் சக்கரம் காரைக்காலில் நிரந்தரமாக முடங்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget