கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் - முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

FOLLOW US: 

கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா  உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கில் மீண்டும் கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு அதிகம் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் வேகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும், கொரோனா இரண்டாவது அலையை வெல்லவேண்டும் என்றால், அதற்கு உங்களின் ஒத்துழைப்பு முழுமையாக வேண்டும் என்று  சில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

கொரோனா தொற்று அதிகரிப்பு மட்டுமில்லாமல் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக சாடியது.கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் - முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து, ஆக்ஸிஜன் உற்பத்தி நிறுவனங்களுடன் முற்பகல் 12.30 மணிக்கு ஆலோசானை நடத்துகிறார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். தற்போது, பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு இந்த ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 14 கோடியே 53 லட்சத்து 15 ஆயிரத்து 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 84 ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 கோடியே 33 லட்சத்து 3 ஆயிரத்து 265 ஆக உள்ளது. ஒரு கோடியே 88 லட்சத்து 17 ஆயிரத்து 424 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 83 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் - முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

இந்தியாவில் நேற்று 3 லட்சத்து 14ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு  கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130ல் இருந்து ஒரு கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 965-ஆக அதிகரித்துள்ளது.  

ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,104 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 553-ல் இருந்து ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 657-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 32 லட்சத்து 76 ஆயிரத்து 39-இல் இருந்து ஒரு கோடியே 34 லட்சத்து 54 ஆயிரத்து 880 ஆக உள்ளது.

Tags: prime minister narendra modi chief ministers high corona states meet states chief ministers

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

அமைச்சரிடம் புகார் அளிக்க வந்த விவசாயிகள்; தடுத்து மிரட்டிய திமுகவினர்!  

அமைச்சரிடம் புகார் அளிக்க வந்த விவசாயிகள்; தடுத்து மிரட்டிய திமுகவினர்!  

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

TN Corona updates: தமிழ்நாட்டில் 11,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை..!

டாப் நியூஸ்

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

Petrol and diesel prices Today: மாற்றமில்லை நேற்றைய ஏற்றத்தோடு தொடரும் பெட்ரோல், டீசல்!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

BREAKING: யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலராக உமா மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்., நியமனம்!