மேலும் அறிய

கே.டி. ராகவன் வீடியோவை வெளியிட்ட யூட்யூப் சேனல் முடக்கம்!

கே.டி.ராகவனை அடுத்து கட்சியின் பல்வேறு உறுப்பினர்கள் குறித்த சர்ச்சை வீடியோக்களும் வெளியிடப்படும் என அந்த யூட்யூபர் எச்சரித்திருந்த நிலையில் தற்போது அவரது யூட்யூப் தளம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் கட்சி உறுப்பினருமான கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் சர்ச்சை வீடியோவை வெளியிட்ட யூட்யூப் சேனல் நீக்கப்பட்டுள்ளது. கே.டி.ராகவனை அடுத்து கட்சியின் பல்வேறு உறுப்பினர்கள் குறித்த சர்ச்சை வீடியோக்களும் வெளியிடப்படும் என அந்த யூட்யூபர் எச்சரித்திருந்த நிலையில் தற்போது அவரது யூட்யூப் தளம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. 

கே.டி.ராகவன் வீடியோவை வெளியிட யூட்யூபருக்கு கட்சித் தலைவர் அண்ணாமலைதான் உந்துதலாக இருந்தார் என சமூக வலைதளத்தில் தகவல் பரவின இதையடுத்து அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை தான் அவ்வாறு கூறவில்லை என மறுத்திருந்தார். மேலும் கே.டி.ராகவன் தன் மீதான புகாரைத் தவறென்று நிரூபிப்பார் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட யூட்யூபரின் செயல்களுக்குக் கட்சி நிர்வாகம் பொறுப்பாகாது எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையேதான் தற்போது அவரது யூட்யூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது. யூட்யூப் தளம் முடக்கப்பட்டதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. 

முன்னதாக, தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பாலியல் சர்ச்சை வீடியோ ஒன்றில் அண்மையில் சிக்கினார். அதுவும் அவர் சார்ந்த கட்சியை சேர்ந்தவர்களால் அந்த குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த யூடியூப்பர் ஒருவரால் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோ பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ காலில் பெண் ஒருவருடன் அரை நிர்வாணத்துடன் கலந்துரையாடும் கே.டி.ராகவன், எதிர் திசையில் பேசும் பெண்ணிடம் சில ஆபாச சமிக்ஞை காட்டுகிறார். இறுதியில் அவரே முழு நிர்வாணமாகி, கொச்சையான செயலில் ஈடுபடுவது போன்ற காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தும் அந்த வீடியோவின் பின்னணியில், வேறு சில விபரங்களையும் தெரிவித்திருந்தார் அந்த யூடியூப்பர். அதில், சம்மந்தப்பட்ட அந்த வீடியோவை அவர் உடனே வெளியிடவில்லை என்றும், அது தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆலோசித்ததாகவும். ‛இந்த வீடியோவை டில்லி தலைமைக்கு கொண்டு செல்ல 6 மாதங்கள் ஆகலாம்... அதுவரை காத்திருக்க முடியுமா.’ என அண்ணாமலை கேட்டதாகவும், பின்னர் ஒரு கட்டத்தில் தான் கூறிய தகவலின் மீதிருந்த நியாயத்தின் அடிப்படையில், அவரே வீடியோவை வெளியிட்டுக் கொள்ள அனுமதித்ததாக கூறுகிறார் அந்த யூடியூப்பர். 

சிவசங்கர் பாபா சொத்துக்களை அபகரிக்க கே.டி.ராகவன் முயற்சிக்கிறார் என சினிமா நடிகர் சண்முகராஜா குற்றம்சாட்டிய நிலையில், அது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ‛அந்த விவகாரம் சட்டப்படி கே.டி.ராகவன் சந்திப்பார்,’ என பதிலளித்திருந்தார். இந்நிலையில் தற்போது, கே.டி.ராகவன் மீது இந்த பாலியல் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வேறு யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும், பொதுவெளியில் பிரபலமான ஒருவர் மீது எழுந்துள்ள இந்த பாலியல் புகாரும், அதற்கு ஆதரமாக வெளியாகியுள்ள இந்த வீடியோவும் தற்போது கே.டி.ராகவனுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியது.

இது குறித்து கருத்து கேட்பதற்காக கே.டி.ராகவனை பல முறை தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. அதே போல், அனுமதி பெற்ற வீடியோ வெளியிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரும் இதில் அடிபட்டுள்ளதால், அவரிடம் அது குறித்து கருத்து கேட்க தொடர்பு கொண்டோம், அவருக்கும் அழைப்பை ஏற்கவில்லை. தமிழ்நாடு பாஜகவில் எழுந்துள்ள இந்த பூதாகர சர்சை, தற்போது அக்கட்சி கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்து கே.டி.ராகவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . தனது முகநூல் பக்கத்தில் அது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

KN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget