WPL 2026 MI vs RCB: 157 ரன்கள் டார்கெட்.. சேசிங்கில் அசத்துமா ஆர்சிபி? பவுலிங்கில் கலக்குமா மும்பை? வெற்றி யாருக்கு?
மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகள் மோதிய முதல் போட்டியில் பெங்களூர் அணிக்கு 157 ரன்களை மும்பை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

டபுள்யூ தொடரின் 4வது சீசன் இன்று மும்பையில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும், முன்னாள் சாம்பியனான ஆர்சிபி அணியும் நேருக்கு நேர் மோதி வருகின்றனர்.
முதலில் பேட் செய்த மும்பை:
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீசியது. இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய மும்பை அணிக்காக அமெலியா கெர் - கமாலினி ஆட்டத்தை தொடங்கினர். ஆர்சிபி அணிக்காக லாரா பெல் முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார். லாரா பெல் பந்துவீச்சில் நெருக்கடி அளித்ததால் மும்பை அணியால் ரன்கள் எடுக்க முடியவில்லை.
அமெலியா கெர் 4 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த நட் 4 ரன்னல் அவுட்டானார். 35 ரன்களுக்குள் 2 விக்கெட்டை இழக்க கமாலினி நிதானமாக ஆட, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆட முயற்சித்தார். கமாலினி 28 பந்துகளில் 5 பவுண்டரி 32 ரன்கள் எடுத்து அவுட்டாக, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 20 ரன்னில் அவுட்டாக 67 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து மும்பை தடுமாறியது.
நிகோலா - சஜானா:
அப்போது, ஜோடி சேர்ந்த நிகோலா - சஜனா ஜோடி சிறப்பாக ஆடியது. லாரா பெல்லை முதல் ஸ்பெல்லிலே ஸ்மிரிதி பயன்படுத்தியதால், அருந்ததி ரெட்டி, நதின், ஸ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் பந்துவீச்சை இந்த ஜோடி திறம்பட சமாளித்தது.
நிகோலா பவுண்டரி அடித்து ஒத்துழைப்பு தர, சஜானா மிகவும் அதிரடியாக ஆடினார். இதனால், தடுமாறிக் கொண்டிருந்த மும்பை 100 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடி அரைசதத்தை நெருங்கிய நிலையில், 25 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸர் விளாசி 45 ரன்கள் எடுத்து அவுட்டாக, மறுமுனையில் சிறப்பாக ஆடிய நிகோலாவும் 29 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவர்கள் இருவரையும் நாதின் டி கிளெர்க் அவுட்டாக்கினார்.
157 ரன்கள் டார்கெட்:
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மும்பை எடுத்தது. இதனால், ஆர்சிபிக்கு 157 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. லாரா பெல் 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து சிறப்பாக பந்துவீசினார். நாதின் டி கிளெர்க் 4 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். லாரன் பெல்1 விக்கெட்டும், ஸ்ரேயங்கா பாட்டீல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.





















