மேலும் அறிய

ஜெயலலிதா பாணியில் சாட்டையை சுழற்றிய இபிஎஸ்.! அதிமுகவில் அடுத்து என்ன.? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

Eps vs Sp Velumani : அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் காரணமாக முக்கிய நிர்வாகிகளின் பதவியை இபிஎஸ் பறித்துள்ள நிலையில், இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுக்கவுள்ளார்.

இரண்டாக பிளவுப்பட்ட அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக  108 தொகுதிகளில் வெற்றிபெற்ற நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முதலமைச்சராகியுள்ளார் விஜய். இந்த நிலையில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  இதனால் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 25 எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க வேண்டும் என சபாதாயகரிடம் இபிஎஸ் தரப்பு முறையிட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த வித முடிவடையும் சபாநாயகர் எடுக்காமல் உள்ளார்.

ஜெயலலிதா ஸ்டைலில் இபிஎஸ்

இந்த நிலையில் தான் தான் அதிமுக என நிரூபிக்கும் வகையில் ஜெயலலிதா பாணியில் அதிரடியாக நடவடிக்கை எடுத்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக உள்ள எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர்,நத்தம் விஸ்வநாதன்,காமராஜ் உள்ளிட்ட 28 பேரின் மாவட்ட செயலாளர்களின் பதவியை இபிஎஸ் பறித்துள்ளார். மேலும் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்து கெத்து காட்டியுள்ளார் இபிஎஸ். அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருவதால் அமைச்சரவையில் அதிமுகவினருக்கு வாய்ப்பு வழங்கினால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும் என்ற காரணத்தால் முதலமைச்சர் விஜய்யும் அமைச்சரவையை விரிவாக்கம் செய்யாமல் அமைதி காப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இபிஎஸ்- சிவி சண்முகம் என இரு தரப்பும் எதிரும் புதிருமாக உள்ளதையடுத்து  பொதுக்குழுவை கூட்டுமாறு பொதுக்குழு உறுப்பினர்களிடம் எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்முகம்  தரப்பு கையெழுத்தை வாங்கியுள்ளது.

சமாதான தூது விடும் இபிஎஸ்

அதே நேரம் இபிஎஸ் தரப்போ சமாதான பேச்சுவார்த்தைக்கு தூது விட்டுள்ளது. நேற்று இபிஎஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு பொய்க்கால் குதிரை அரசு அமைத்துவிட்டது. நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம்.

 மாவட்ட செயலாளர் கூட்டத்தில் முக்கிய முடிவு

ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான். கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும் என குறிப்பிட்டிருந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவிற்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட பொதுக்குழு கூட்டம் கூட்டுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த எஸ்.பி.வேலுமணி தரப்பு தீவிரமாகி வருகிறது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
தமிழ்நாட்டிற்கு இன்னும் விடுதலை கிடைக்கல... மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு ரத்தாகும்! - அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget