மேலும் அறிய

"இலவு காக்கும் கிளி"...."தகுதியான கட்சி, சின்னம் தகுதியானவர்களிடம் இருந்தால்தான் மதிப்பு" - அமமுக நிர்வாகி அடித்த போஸ்டர்

தகுதியான கட்சி, சின்னம் தகுதியானவர்களிடம் இருந்தால்தான் மதிப்பு என்று அச்சிடப்பட்ட போஸ்டர் நகர பகுதிகளில் ஒட்டியதால் பரபரப்பபு

விழுப்புரம்: அதிமுகவை விமர்சனம் செய்யும் வகையில் அமமுக நிர்வாகி ஒருவர் விழுப்புரத்தில் "தகுதியான கட்சி, சின்னம் தகுதியானவர்களிடம் இருந்தால்தான் மதிப்பு" இலவு காக்கும் கிளி என போஸ்டர் நகர பகுதிகளில் ஒட்டியதால் பரபரப்பபு ஏற்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில் அதிமுக திமுக பாமக காங்கிரஸ் போன்ற கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி தேர்தல் கருத்துக்கேட்பு கூட்டங்களையும் அரசியல் கட்சியினர் மாவட்டம் தோறும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம் மாவட்ட துனை கழக செயலாளர் சுகர்னா அதிமுக கூட்டணி அமைப்பதை விமர்சனம் செய்யும் வகையில் இலவு காக்கும் கிளி போல் கூட்டணிக்காக அதிமுக காத்திருப்பதாகவும், தகுதியான கட்சி, சின்னம் தகுதியானவர்களிடம் இருந்தால்தான் மதிப்பு என்று அச்சிடப்பட்டு விழுப்புரம் நகர பகுதிகளான திருவிக சாலை, காமராஜர் வீதி, விழுப்புரம் புதுச்சேரி சாலை போன்ற இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். அமமுக நிர்வாகி நகைச்சுவை நடிகர்  வடிவேல் பாணியில் இலவு காக்கும் கிளி சித்தரித்து ஒட்டியுள்ள போஸ்டரால் விழுப்புரம் நகர பகுதிகள் முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் கடந்த சிலதினங்களுக்கு முன்  டி.டி.வி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

“எந்த கட்சியுடன் கூட்டணி என்பது முடிவு செய்து தேர்தல் நேரத்தில் அறிவிப்பேன் என்றும்  நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் அதிமுக பழனிச்சாமிக்கு துரோகத்தை தவிர வேறும் எதுவும் தெரியாது ஆட்சி பொறுப்பில் அமர்த்தியவர்களுக்கு, தமிழக மக்களுக்கும் துரோகம் செய்தவர் அவர் என்பதால் தமிழக மக்கள்  யாரும் அவரை நம்ப மாட்டார்கள்” என தெரிவித்தார்.

இந்தியா கூட்டணியிலிருந்து பல்வேறு கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணியிலுள்ள திமுக விலகி தனித்து போட்டியிடுகின்ற நிலை ஏற்படும் என கூறினார். அமமுக  எடப்பாடி பழனிசாமியோடு கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்றும் அம்மாவின் தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அதில் துரோகிகளுக்கு இடம் இல்லை என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியை பார்த்து பயப்படுகிறார் என தெரிவித்தார்.
 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி அமைத்தால் ஆட்சி அமைக்க தமிழகத்தில் முடியாது என தான் முன்பே தெரிவித்ததாகவும், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி பாஜக போன்ற பல்வேறு கூட்டணி கட்சிகளையும், பணத்தையும் வைத்துகொண்டு வெற்றி பெற முடியவில்லை எலி வலையானாலும் தனிவலையாக கொண்டு அமமுக கம்பீரமாக செயல்பட்டு கொண்டு இருப்பதாகவும் இந்த இயக்கத்தினை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என கூறினார்.
 
அதிமுக பழனிசாமியின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்கள் கொதித்து போய் திமுகவிற்கு வாக்களித்துள்ளதாகவும் குடும்பத்திற்காக உழைக்கிற கட்சி திமுக உள்ளதால் மாற்று கட்சியை மக்கள் எதிர்பார்ப்பதால் அமமுக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget