(Source: ECI/ABP News/ABP Majha)
Complaint Against Kamal: ஒன்றிய அரசை விமர்சித்ததாக கமல்ஹாசன் மீது காவல் ஆணையரகத்தில் புகார்
மத்திய அரசை விமர்சித்து பாடல் எழுதியதாக கமல்ஹாசன் மீது செய்து காவல் ஆணையரகத்தில் புகார்
'பத்தல பத்தல' பாடலில் மத்திய அரசை விமர்சிப்பதாக கமல்ஹாசன் மீது புகார்:
விக்ரம் படம் 'பத்தல பத்தல' பாடலில் மத்திய அரசை விமர்சிப்பதாக கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் திரைப்படம்:
நடிகர் கமல்ஹாசனின் கணீர் குரலில் 'பத்தல பத்தல' கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே..பஃர்ஸ்ட் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தமிழக வெளியீட்டு உரிமையை முதல்வரின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருக்கிறது. இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியது. அதன்படி, ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது.
கமல்ஹாசன் வரியில்; அனிருத் இசையில்:
இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசனின் கணீர் குரலில் 'பத்தல பத்தல' கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..பஃர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது. அனிருத் இசையில் தெறிக்கும் இசையில் மிரட்டலாக பஃர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..
#CINEMAUPDATE | நடிகர் கமல்ஹாசன் மீது புகார்!https://t.co/wupaoCQKa2 | #KamalHaasan #PathalaPathala #Anirudh #Vikram #VikramFirstSingle pic.twitter.com/eq2aRUm3kf
— ABP Nadu (@abpnadu) May 12, 2022
புகார்:
இந்நிலையில் மத்திய அரசை விமர்சித்து பாடல் எழுதியதாக கமல்ஹாசன் மீது செய்து சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மீது ஆர்.டி.செல்வம் என்பவர் புகார் மனு அளித்துள்ளர். அதில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தில் பத்தலே பத்தலே பாடலில் மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக உள்ள வரிகளை நீக்க கோரி மனு அளித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்