மேலும் அறிய
Advertisement
”விஜய் வருகையால் சீமானுக்கு எதார்த்தமான அச்சம் ஏற்பட்டிருக்கலாம்” - கார்த்தி சிதம்பரம்
சீமானுக்கு ஒரு முறை வாக்களித்தவர்கள் மீண்டும் சீமானுக்கு வாக்களிப்பதில்லை என்பதால் அவருக்கு எதார்த்தமான அச்சம் ஏற்பட்டிருக்கலாம் - கார்த்தி ப சிதம்பரம் கருத்து.
விஜய் சாதுர்யமான முடிவுகளை எடுப்பாரா அல்லது பிம்பத்தின் மீதான முடிவுகளை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - கார்த்தி ப சிதம்பரம் கருத்து
காரைக்குடியில் கார்த்தி ப சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் கால்பந்து போட்டியை துவக்கி வைத்து போட்டியை கண்டு ரசித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி ப சிதம்பரம்....," த.வெ.க., அரசியல் கூட்டத்தின் தொகுப்பை சோசியல் மீடியாவில் பார்த்தேன். இனிமேல் தான் கொள்கை விளங்களை வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஒரு லேட்டஸ்ட் எனர்ஜி இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஒரு உருவமாக, வடிவமாக, அமைப்பாக மருவி தேர்தலை சந்திக்குமாக என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இன்னும் முழுமையாக விஜய் பேசியதை கேட்டவில்லை.
சீமானுக்கு நிரந்தர வாக்கு வங்கி இல்லை
விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். விஜய் சாதுர்யமான முடிவுகளை எடுப்பாரா அல்லது பிம்பத்தின் மீதான முடிவுகளை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தொடர்ந்து விஜய் மீதான சீமானின் விமர்சனம் குறித்து கேள்விக்கு, சீமானுக்கு நிரந்தர வாக்கு வங்கி இல்லை. ஒரு முறை வாக்களித்தவர்கள் மீண்டும் சீமானுக்கு வாக்களிப்பதில்லை என்பதால் அவருக்கு எதார்த்தமான அச்சம் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sabarimala Pilgrims: சபரிமலை பக்தர்களுக்கு ஒரு நற்செய்தி..! ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு, செய்ய வேண்டியது என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Rasipalan Today Nov 3: மேஷம் கவனமா இருங்க..ரிஷபத்துக்கு நட்பு பலம் - உங்கள் ராசிக்கான பலன்?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion