Vice President Election 2022: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்த மம்தா பானர்ஜி
Vice President Election 2022: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பெனர்ஜீ அறிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பெனர்ஜீ அறிவித்துள்ளார். வேட்பாளர் தேர்வில் எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் 18ம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வாக இருந்தது, குடியரசுத் தலைவர் தேர்தல். மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக அரசின் வேட்பாளராக, ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரௌபது முர்முவும், ஒட்டுமொத்த எதிர்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்ட்டார். இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், பலகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், ஆளும் பாஜகவின் வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றுவிடும் நிலையில் இருக்கிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திரௌபதி முர்மு முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பெனர்ஜீ, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்துள்ளார். தனது கட்சி எம்.பிகளுடனான அலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் கட்சியிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. இதனால், நாங்கள் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒட்டுமொத்த எதிர்கட்சிகளின் வேட்பாளராக தனது கட்சியின், துணைத் தலைவரை தேர்வு செய்ய வைத்து, அனைத்து எதிர் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற காய்களை நகர்த்தி களமிறாங்கிய மம்தாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. துணை குடியரசுத் தேர்தலில் வெற்றி சாத்தியமில்லை என்து தற்போது உறுதியான நிலையில், எதிர் டீலில் விட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் பரவலான பேச்சாக உள்ளது. மேலும் இது மம்தாவின் மாஸ்டர் மைண்ட் எனவும் பலர் கூறிவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்