Vanniarasu: ஆளுநர் தமது நஞ்சு கருத்தை திரும்பப்பெற்று, மன்னிப்பு கேட்கவேண்டும்- வன்னியரசு, விசிக.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்றும் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாகச் செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் வன்னியரசு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “ஒரு அரசியல்வாதி போல ஆளுநர் பேசுவது அரசியல் அமைப்புச்சட்டத்துக்கே எதிரானது மட்டுமல்ல; சொந்த கருத்தை திணிக்கும் அயோக்கியத்தனம். இந்தியாவிலேயே மிக ஆபத்தான இயக்கம் #RSSதான் என்பதை நாடறியும். அந்த பயங்கரவாத இயக்கதில் கொண்டு மக்கள் இயக்கமான #பாப்புலர் @PFIOfficial இயக்கத்தை கொச்சைப்படுத்துவது ஆபத்தானது மட்டுமல்ல;அந்த இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இசுலாமிய மக்களை ஆபத்தானவர்களாக காட்டும் முயற்சியே.ஆளுநர் தமது நஞ்சு கருத்தை திரும்ப பெற்று,மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கொச்சைப்படுத்துவது ஆபத்தானது மட்டுமல்ல;அந்த இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இசுலாமிய மக்களை ஆபத்தானவர்களாக காட்டும் முயற்சியே.
— வன்னி அரசு (@VanniArasu_VCK) May 6, 2022
ஆளுநர் @rajbhavan_tn தமது நஞ்சு கருத்தை திரும்ப பெற்று,
மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு ஆளுநர் பேசியதாவது, ''ராணுவ வீரர்கள் தினமும் நாட்டிற்காகப் போரிட்டு வருகின்றனர். தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவம் எப்போதுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனினும் ராணுவம் குறித்த பெரிய அளவில் புத்தகம் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தீவிரவாதத்திற்கு எதிராக எப்படி போரிடுவது, உண்மையில் என்ன என்ன பிரச்சினைகள் உள்ளது என்பது குறித்து விரிவாக விளக்கும் வகையில் இந்த புத்தகம் உள்ளது.
இந்த புத்தகத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி. தீவிரவாதம் குறித்து விரிவாக இந்த புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். இவர்கள் மறுவாழ்வு மீட்பு மையம் போலவும், மாணவர்கள் அமைப்பைப் போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்துகொண்டு நம் நாட்டில் இயங்கி வருகின்றனர். மேலும் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டு வருகின்றது. ஒட்டுமொத்தத்தில் நாட்டைச் சீர்குலைக்கவே இந்த அமைப்பு இயங்கி வருகின்றது. தீவிரவாதத்திற்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாகத் தற்போது நாட்டில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளது.எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காஷ்மீருக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்'' எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்