மேலும் அறிய

Thirumavalavan: ”எல்லாமே கிசுகிசுப்பு, முணுமுணுப்பு தான்..அதிகாரப்பூர்வமாக பேசவில்லை” - திருமாவளவன் விளக்கம்

VCK Thirumavalavan: திமுக - அதிமுக தொடர்பாக என்னிடம் யாரும் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை என, விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

VCK Thirumavalavan: யாரிடமும் பேரம் பேசவில்லை, நாங்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் உறுதிபட பேசியுள்ளார். 

திருமாவளவனால் வெடித்த சர்ச்சையும் - விளக்கமும்..

 விசிக தலைவர் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ”திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாகவும், முதலில் எடப்பாடி பழனிசாமியையும், பின்னர் தன்னையே பொது முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதாகவும்” பேசியுள்ளார். இதனால் இரண்டு வருடங்களுக்கு முன்பாக தோன்றிய கட்சிக்காக, சுமார் அரைநூற்றுண்டு காலமாக பரம எதிரியாக இருந்த இரண்டு கட்சிகள் இணைய முயன்றது பெரும் பேசுபொருளானது. தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்காகவே திருமா இப்படி இல்லாத விஷயங்களை எல்லாம் பேசி வருகிறார் என திமுகவினரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில் அந்த பேட்டி தொடர்பாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

”அதிகாரப்பூர்வமாக என்னை அழைக்கவில்லை”

சர்ச்சைகள் தொடர்பாக பேசுகையில், “தவெக ஆதரவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டபோதே திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் என அறிவித்து இருந்தேன். இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளோம். கடைசி நேரத்தில் கூட என்னை முதலமைச்சராக்குவதாக வந்த அழைப்பில் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்ததாக நான் கூறவே இல்லை. யாரு என்னுடைய நலம் விரும்பிகள் பேசி இருக்கலாம். இடைதரகர்கள் பேசியிருக்கலாம். அரசியலில் இதெல்லாம் நடக்க தானே செய்யும். குறிப்பிட்ட தலைவர் என்னிடம் பேசினார் என நான் சொல்லவே இல்லை. இதெல்லாம் கிசுகிசுப்புகளாகவே என்னிடம் வந்தன. அதன் அடிப்படையிலேயே நான் பேசினேன். பேட்டியில் சொன்னதெல்லாம் கூட கிசுகிசுப்புகள் அடிப்படையிலானது மட்டுமே.

யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை - திருமா

நாங்கள் இப்படி ஒரு முடிவெடுப்போம். அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என எந்த தரப்பில் இருந்தும் எனக்கு தகவல் வரவில்லை. ஏன் ஒரு தலித் முதலமைச்சர் ஆகக்கூடாது என சில நலம் விரும்பிகள் எடுத்த முயற்சி தான் இவை. எங்கள் கட்சி பொதுச்செயலாளர் கூட ஒரு ட்வீட் போட, அதுதொடர்பாக பலர் என்னிடம் பேசினர். ஆனால் அது ஒரு சரியான அணுகுமுறை இல்லை என நான் தெரிவித்தேன். ஆரம்பத்திலேயே திமுக கூட்டணியில் தொடர்ந்தாலும், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கலாம் என முடிவெடுத்துவிட்டோம். கட்சிக்கும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்குள்ளாகவே, வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதாகவும், பேரம் பேசுவதாக அவதூறுகளை பரப்புவது என்ன நியாயம். 

இதையும் படியுங்கள்: Thiruma: திருமாவை விளாசும் திமுகவினர்..! TVKவின் அமைச்சர் பதவிக்காக இஷ்டத்துக்கு அடித்துவிடுவதாக அட்டாக்

தலித் முதலமைச்சராக முடியாது - திருமா

இரண்டு சீட்டுகளை வைத்துக்கொண்டு நாங்கள் எங்கும் பேரம் பேசவில்லை. அந்த அளவிற்கு தவெகவில் யாருடனும் எங்களுக்கு அணுகல் இல்லை. குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவெகவிற்கு ஆதரவு அளித்தோம். தவெக ஆட்சியில் அங்கம் வகிக்க மாட்டோம். பாஜக ஆதரவு கட்சி என தவெகவை விமர்சித்துள்ளேன். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராவது எளிதல்ல” என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Embed widget