மேலும் அறிய

MK Stalin 100 day rule: ‛வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுப்பேன்...’ 100வது நாளில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

100 நாள் திமுக ஆட்சி, வேளாண் பட்ஜெட் ஒரே நாளில் வந்தததால், கருணாநிதி நினைவிடம் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காய்கறிகளின் மேல், ‘100 நாள் ஆட்சி மக்கள் மகிழ்ச்சி’ என எழுதப்பட்டிருந்தது.

கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதும், அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும்தான், இந்த அரசு 100 நாட்களில் செய்த பெரிய சாதனையாக தான் கருதுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

2021-22ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் அமைச்சர் உரையாற்றினார். சுமார் 2 மணி நேரம் ஆற்றிய உரையில் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பட்ஜெட் உரை முடிந்தபின்பு, திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 100 நாள் ஆனதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதில், “தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. படிப்படியாக தொடர்ந்து நிறைவெற்றுவோம். நம்பிக்கை கொடுக்கும் நாட்களாக 100 நாள் ஆட்சி அமைந்துள்ளது. 100 நாள் சாதனை பற்றி பேசினீர்கள். ஆனால், அடுத்து வரும் காலம் பற்றியே என் நினைப்பு இருக்கிறது. வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாளில் பணிகள் இருக்கும். கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதும்; அவர்களுக்கு அரவணைப்பாக இருந்ததும்தான், இந்த அரசு 100 நாட்களில் செய்த பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். இது மக்களின் சாதனை, உங்களுக்கு உழைக்க எனக்கு நீங்கள் உத்தரவிட்டதால் கிடைத்த பயன் இது. பெரியார் கண்ட கனவை கலைஞர் முன்னெடுத்ததை செயல்படுத்தி வருகிறேன். கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு என்னை இயக்குகிறது நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம்” என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் சென்று முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். அப்போது உடன் துரைமுருகன், சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் உடனிருந்தனர். 100 நாள் திமுக ஆட்சி, வேளாண் பட்ஜெட் ஒரே நாளில் வந்தததால், கருணாநிதி நினைவிடம் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காய்கறிகளின் மேல், ‘100 நாள் ஆட்சி மக்கள் மகிழ்ச்சி’ என எழுதப்பட்டிருந்தது.

மேலும்,  திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 100 நாள் நிறைவடைந்ததை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒரு கட்சியின் ஆட்சியாக இன்றி, ஓர் இனத்தின் - கொள்கையின் ஆட்சியாக, கடந்த 10 ஆண்டுகளாகத் தாழ்ந்து கிடந்த தாய்த்தமிழ்நாட்டின் மீட்சியாக மிடுக்குடன் நூறாவது நாளில் கழக அரசு! 100 நாட்கள் அளித்த உற்சாகத்தோடு நூற்றாண்டுக்குப் பெயர் நிலைக்கும் சாதனைகளைச் செய்வோம்!’ எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
Embed widget