மேலும் அறிய
Advertisement
union Budget 2024 "உப்பு சப்பில்லாத பட்ஜெட்" - அதிமுக வைகைச் செல்வன் காட்டம்
இந்தியா முழுவதுமான சமச்சீரான வளர்ச்சி இருக்காது. இந்த நிதிநிலை அறிக்கை என்பது ஒரு வீக்கம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தின் மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது, பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இது குறித்துஅதிமுகவின் இலக்கிய அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வன் கூறுகையில்...
மத்திய அரசின் பட்ஜெட் உப்பு சப்பில்லாத பட்ஜெட்டாக தான் பார்க்கிறோம். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இடம் பெறவில்லை, இது மிகுந்த வருத்தமளிக்க கூடிய ஒன்றாகும். சென்னை மெட்ரோ பணிக்கு நிதியில் ஒதுக்கப்படவில்லை, மேலும் ஆந்திரா பீகாரருக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
யார் இந்த அரசுக்கு தாங்கி பிடிக்கிறார்களோ, தூணாக இருக்கிறார்களோ, துணையாக இருக்கிறார்களோ அவரது மாநிலங்களுக்கு மட்டும் நிதியை ஒதுக்கி இருப்பது பாராபட்சமான மனப்பான்மையை காட்டுகிறது. இதில் அரசியல் செய்வதை போல தோன்றுகிறது.
ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. வெள்ள நிவாரண தடுப்பு பணிகளுக்காக அசாம், ஜார்கண்ட், உத்தரகாண்ட், மாச்சல பிரதேசத்திற்கு என்று 11,500 கோடி நிதி ஒதுக்கு இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படவில்லை.
மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. ஏற்கனவே ஜிஎஸ்டி யை கொண்டு வந்து மேலும் மேலும் நிதி வருவாயை மத்திய அரசுக்கு கொண்டு செல்கிறார்கள். மாநிலத்திற்கு அதனால் ஒரு பயனும் இல்லை.
ஏழை பெண்கள் உள்ளிட்ட 4 ஜாதிகள் இருப்பதாக நிதி அமைச்சர் ஒரு புதிய சமூக நீதிக்கு பாடம் கற்று தருவதை போல இளைஞர்கள் விவசாயிகள் இவர்கள் இருப்பதை போல சொல்கிறார். இது ஒரு பாராபட்சமான ஒன்றைத்தான் மேலும் மேலும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு போதிய நிதி வழங்கவில்லை என்பது கவலை தரக்கூடிய ஒன்று. மேலும் இது போன்ற நடவடிக்கையால் இந்தியா முழுவதுமான சமச்சீரான வளர்ச்சி இருக்காது. இந்த நிதிநிலை அறிக்கை என்பது ஒரு வீக்கம், வீக்கம் என்பது ஒரு இடத்தில் பெரியதாகவும் அதாவது ஆந்திராவுக்கு, பீகாருக்கு பெரியதாகவும் மற்ற இடங்களில் மெலிந்தும் காணப்படுவது சமச்சீரான வளர்ச்சி அல்ல சமச்சீரான பட்ஜெட்டும் அல்ல.
தூத்துக்குடி போன்ற பகுதிகளில் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது அவர்களுக்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்கவில்லை. எனவே இது மாற்றம் தாய் மனப்பான்மை தான் காட்டுகிறது. ஜார்கண்ட் இமாச்சலம் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து” என வைகைச்செல்வன் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விளையாட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion