அதிமுக-தவெக கூட்டணி Deal Over.! கைகோர்க்கும் இபிஎஸ் , விஜய்?..சாதித்து காட்டிய முக்கிய புள்ளி யார்?
ADMK-TVK Vijay: திமுகவை வீழ்த்த, அதிமுக எடுத்துள்ள ஆயுதம் விஜய் என அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய புள்ளி ஒருவரின் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தற்போதே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. இந்நிலையில், கூட்டணி பலத்துடன் இருக்கும் திமுகவை, கூட்டணியில் இருந்து பிரிப்பது கடினம் என்பதால், புதிய வரவான தவெக விஜயுடன், இணைந்து , ஆட்சியை பிடித்துவிடலாம் என்று அதிமுக புது கூட்டணி உருவாகியிருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணியை ஏற்படுத்தியதற்கு காரணமாக இருந்த முக்கிய புள்ள யார்?
திமுக - அதிமுக
தமிழ்நாட்டின் அரசியலை பொறுத்தவரை, வழக்கமாக திமுக -அதிமுக இடையேதான் கடுமையான போட்டி நிலவும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் கட்சிகள் உடைந்து இபிஎஸ் அணி ஒரு பக்கம், ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரன் ஒரு பக்கம் என பல உட்கட்சி பிரச்சனைகள் எழுந்து கட்சியையே சிதைத்துவிட்டதாக, அதிமுக தொண்டர்களே கூறுவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து வலுவான கூட்டணி பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அதற்கு திமுகவைவிட கூட்டணி பலம் அவசியம்.
Also Read: அமெரிக்கா GPS-க்கு மாற்றாக களமிறங்கிய ISRO: 100வது ராக்கெட் GSLV-F15 கவுண்டவுன் தொடங்கியது
அதிமுக - தவெக கூட்டணி
ஆனால் விசிக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக பக்கம் வர மறுக்கின்றனர் . இந்நிலையில், அதிமுக போட்ட ஒரே பிளான், எப்படியாவது விஜய்யை நமது பக்கம் இழுப்பதுதான். அதற்கு சில சமரசங்களையும் செய்ய தயாராகியிருக்கிறது.
விஜய், கட்சி தொடங்கியதில் இருந்தே, அதிமுகவை விமர்சனம் செய்யாமல் இருந்து வருவது, எடப்பாடியும் விஜய் குறித்த கேள்விகளை சாஃப்டாக டீல் செய்வது என மறைமுகமாக இருவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட அதிமுக ஜெயக்குமார் விஜய் எங்க எதிரி இல்லை என நேரடியாகவே தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜூனா பிளான்;
இந்நிலையில் விஜய்க்கு, இந்த கூட்டணி ப்ளானை போட்டு கொடுத்ததே வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனரும் முன்னாள் விசிக பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனா தான் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரே அதிமுக மற்றும் விஜய்க்கு இடையே பாலமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு 60 சீட்டும் துணை முதல்வர் பதவியும் வழங்குமாறு எடப்பாடிக்கு கண்டிசன் போட்டுள்ளாராம். ஆனால் 60 சீட் சாத்தியமில்லை 40 கொடுக்கலாம் என எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தால் இந்த அதிமுக தவெக கூட்டணி அமைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Also Read: Maha Kumbh Mela-Nasa: விண்வெளியில் இருந்து மகா கும்பமேளா.! கிளிக் செய்த இஸ்ரோ, நாசா...
பாஜக வேண்டாம் -இபிஎஸ்
மேலும், இந்த தருணத்தில் அதிமுக கூட்டணியில் இணைய பாஜக விருப்பம் காட்டி வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலைகூட பாஜக கூட்டணியுடன் அதிமுக எதிர்கொண்டது. ஆனால் இந்த முறை, அண்ணாமலை இருக்கும்வரை அது நடக்காது என இபிஎஸ் உறுதியாக இருக்கிறார். அதே சமயம் அண்ணாமலைக்கு எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இணைய விருப்பமில்லை என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், பாஜகவால், சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்றும், பாஜகவால் இழப்புதான் என்றும் இபிஎஸ் நினைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விஜய் தரப்பும் , இசைந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவில் எடப்பாடி ஸ்ட்ராங்காக இருப்பதை பார்த்தால் அவருக்கு வேறொரு பலம் வாய்ந்த கூட்டணி அமைந்துவிட்டதாகவும், அது விஜயுடன்தான் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

