மேலும் அறிய

அமெரிக்கா GPS-க்கு மாற்றாக களமிறங்கிய ISRO: விண்ணில் பாயவுள்ள 100வது GSLV-F15 ராக்கெட்

ISRO GSLV-F15: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இஸ்ரோ தனது 100வது ராக்கெட்டான, GSLV-F15ஐ நாளை காலை ( 29.01.2025 ) 6.23 மணியளவில் விண்ணில் செலுத்த உள்ளது.

இஸ்ரோ , ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100வது ராக்கெட்டை  செலுத்த தயாராக இருக்கிறது. இது மேப் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் NavIC-ன் 2வது தலைமுறை செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும், முக்கியத்துவமான பணியை நாளை ( 29.01.2025 )  மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், GSLV-F15 ராக்கெட் எப்போது விண்ணில் செலுத்தப்பட உள்ளத் என்பது குறித்தும், இதனால என்ன பயன் என்பது குறித்தும் பார்ப்போம். 

100வது ராக்கெட்:

GSLV-F15 என்பது இந்தியாவின் Geosynchronous Satellite Launch Vehicle (GSLV) இன் 17வது  ராக்கெட்டாகும்.மேலும், இது, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, கிரையோஜினிக் இன்ஜினின் 11வது ராக்கெட்டாகும். இதுமட்டுமன்றி, ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100வது ஏவுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

விண்ணில் எப்போது?

GSLV F15 ராக்கெட்டானது , நாளை (  ஜனவரி 29 ), NVS-02 செயற்கைக்கோளைச் சுமந்துகொண்டு, ஸ்ரீஹரிகோட்டாவில்  உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 06:23 மணிக்கு விண்ணில் பறக்க தயாராக உள்ளது. அதற்கான கவுண்டனும் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, GSLV-F15 ராக்கெட்டாஅனது NVS-02 செயற்கைக்கோளை ஒரு புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் ( அதாவது புவிக்கு கிடைமட்டமாக சுற்றி வரும் வகையில் நிலை நிறுத்தப்படும்). 

பயன்கள்:

இந்த் திட்டமானது நேவிக் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.இந்தியன் நேவிகேஷன் கன்ஸ்டலேஷன் (நேவிக்) என்பது மேப்பிங் , இடமறிதல் உள்ளிட்ட வசதிகளுக்கு இதர உலக நாடுகளை சார்ந்திருக்காமல், இந்தியாவின்  பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பாகும். இது இந்தியாவிலும், இந்திய நிலப்பரப்பைத் தாண்டியும், சுமார் 1500 கி.மீ தொலைவில் உள்ள பகுதியிலும் உள்ள பயனர்களுக்கு துல்லியமான நிலை, வேகம் மற்றும் நேரம் (பிவிடி) சேவையை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா GPS-க்கு மாற்றாக களமிறங்கிய ISRO: விண்ணில் பாயவுள்ள 100வது GSLV-F15 ராக்கெட்

விண்ணில் நிலை நிறுத்தப்படவுள்ள செயற்கைக்கோள்

இதன் மூலம், அமெரிக்காவின் ஜிபிஎஸ் சேவைகளை பயன்படுத்துவது குறைந்து, உள்நாட்டு சேவையை பயன்படுத்துவது அதிகரிக்கும். மேலும், இந்தியாவின் ராணுவ ரீதியிலான பாதுகாப்பு காரணங்கள், கடல்வழி பயணங்கள் உள்ளிட்டவைகளுக்கு துல்லியமான சேவையை, ஜிபிஎஸ் வழங்கும் சேவையைவிட மேலும் துல்லியமாக வழங்குவதற்கான அடுத்தகட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும், அணு கடிகார சேவை உள்ளிட்டவை குறித்தும் இடம் பெற்றுள்ளது. 

NavIC இரண்டு வகையான சேவைகளை வழங்குகிறது, ஒன்று ஸ்டாண்டர்ட் பொசிஷனிங் சர்வீஸ் (SPS) மற்றும்  கட்டுப்படுத்தப்பட்ட சேவை Restricted Service (RS). கட்டுப்படுத்தப்பட்ட சேவையை , அனைவராலும் பயன்படுத்த முடியாது; பாதுகாப்பு காரணங்களால், அரசு மட்டுமே பயன்படுத்தும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. 

Also Read: TN Weather: 2 நாட்களுக்கு 4 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை- வானிலை புது அப்டேட்.!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget