TVK Vijay: திருச்சியில் விஜய்.. மக்கள் மத்தியில் என்ன பேசப்போகிறார் தளபதி? இதோ நேரலையில்
தவெக தலைவர் விஜய் திருச்சியில் இன்று தனது முதல் தேர்தல் பரப்புரையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். கட்சி தொடங்கிய நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
சென்னையில் இருந்து திருச்சி வந்த விஜய்:
இந்த நிலையில், நடிகர் விஜய் இன்று தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். இதற்காக அவர் தனி விமானம் மூலமாக இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலமாக வந்தார். விஜய் திருச்சி வருவதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான தவெக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் திருச்சி விமான நிலையத்தில் காலை முதலே குவிந்தனர்.
இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய் தனது அரசியல் வாகனத்தில் புறப்பட்டு வெளியே வந்தார். ஆனால், அந்த பேருந்து விஜய் தேர்தல் பரப்புரைக்குச் செல்லும் இடமான மரக்கடைக்குச் செல்ல முடியாத அளவிற்கு தவெக தொண்டர்கள் கூட்டம் அவரது பேருந்தை சுற்றி உடன் வந்து கொண்டிருக்கின்றனர்.
தொண்டர்கள் ஆர்வம்:
விஜய் இன்று மரக்கடை பகுதியில் பேசுவதற்கு காலை 10.30 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே பேச காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால், அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ள மரக்கடை பகுதிக்கு அவர் திட்டமிட்ட நேரத்தில் அவரால் செல்ல முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
விஜய் இன்று தனது பரப்புரையில் என்ன பேசப்போகிறார்? எதைப் பற்றி பேச உள்ளார்? என்ற எதிர்பார்ப்பு அவரது தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.





















