TVK 2nd,1st List: 2வது பட்டியலை வெளியிட்ட விஜய்: 19 மாட்டங்களுக்கான தவெக நிர்வாகிகளின் பெயர்கள்
TVK Party District Secretaries Second List: தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் கட்டமாக மாவட்ட நிர்வாகிகளை நியமித்து, அதற்கான உத்தரவை பிறப்பித்தார், அக்கட்சியின் தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை 2ம் கட்டமாக நியமனம் செய்து, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்,தவெக தலைவர் விஜய். இந்நிலையில், 2ம் கட்டம் வெளியிட்டுள்ள பட்டியல் மற்றும் முதல் கட்டமாக வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள பெயர் விவரங்களை பார்ப்போம்.
தவெக கட்சியை வலுப்படுத்தும் விஜய்:
தவெக கட்சியை வலுப்படுத்தும் வகையில், 234 சட்டமன்ற தொகுதிகளை, 120 மாவட்டங்களாக பிரித்து, தவெக நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவை விஜய் எடுத்தார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர் மற்றும் 10 நியமன உறுப்பினர்களும் நியமிக்கப்படும் வகையிலான முடிவை எடுத்தார்,
2ம் கட்ட தவெக மாவட்ட நிர்வாகிகள்:
அதன் முதற்கட்டமாக, கடந்த 24ஆம் தேதி 19 மாவட்டங்களுக்கான மாவட்ட பொருளாளர், இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு , விஜய் உருவம் கொண்ட, வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இன்று 19 மாவட்டங்களுக்கான, 2ம் கட்டமாக தவெக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பெயர் விவரங்களை தெரிந்து கொள்ள , இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். 2ம் கட்ட தவெக நிர்வாகிகள் பட்டியல்
பின்னர், எந்த மாவட்டத்திற்கான நிர்வாகிகள் விவரங்களை, தெரிந்து கொள்ள வேண்டுமோ, அந்த மாவட்டத்தின் மீது கிளிக் செய்யவும்.
முதல் கட்ட பட்டியல்:
முதல் கட்டமாக 19 மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். முதல் கட்டமாக தவெக நிர்வாகிகள் பட்டியல். முதல் கட்ட 19 மாவட்ட தவெக நிர்வாகிகள் பட்டியல்
இந்நிலையில், 2ம் கட்டமாக மாவட்ட நிர்வாகிகள் குறித்து தவெக விஜய் தெரிவித்துள்ளதாவது, “தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக, 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார்.
Also Read: PM Modi-Trump Inauguration: சீனாவுக்கு அழைப்பு; மோடிக்கு இல்லை.! நண்பரை, டிரம்ப் அழைக்காதது ஏன்?





















