மேலும் அறிய

Vijay TVK: ”வாய் மொழியில் வித்தை காட்டுவது நமது வேலை அல்ல” - தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

Vijay TVK: ”அரசியல் களத்தில் வாயில் வித்தை காட்டுவது நமது வேலை அல்ல” என்று தவெக தொண்டர்களுக்கு தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

Vijay TVK: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தொண்டர்களுக்கு இரண்டாவது முறையாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ” அரசியல் களத்தில் வாயில் வித்தை காட்டுவது நமது வேலை அல்ல” என்று வலியுறுத்தியுள்ளார்.

தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்:

விஜய் எழுதியுள்ள கடிதத்தில், “

மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது.

மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும். அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும்.

அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி. மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஓட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே. என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும். இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.

கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது.

ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக. தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம்” என விஜய் தனது கடிதத்தில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Vijay TVK: ”வாயில் வித்தை காட்டுவது நமது வேலை அல்ல” - தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்
Vijay TVK: ”வாயில் வித்தை காட்டுவது நமது வேலை அல்ல” - தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்
IND vs NZ 1st Test:நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்:அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பும்ரா!
IND vs NZ 1st Test:நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்:அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பும்ரா!
Sleep Type: தூக்கத்துல இத்தனை நிலைகளா? வித்தியாசம் என்ன? எது மிக சிறந்தது? இந்த சண்டே இதை தெரிஞ்சுக்கலாமா?
Sleep Type: தூக்கத்துல இத்தனை நிலைகளா? வித்தியாசம் என்ன? எது மிக சிறந்தது? இந்த சண்டே இதை தெரிஞ்சுக்கலாமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Madurai | Su Venkatesan vs Minister | MP சு.வெ vs அமைச்சர் மூர்த்திமுற்றும் வார்த்தைப்போர்!பற்றி எரியும் மதுரைUdhayanidhi on Tamilisai | ”அக்கா..கிரிவலம் நான் போனேனா?”தமிழிசைக்கு உதயநிதி பதிலடிRN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Vijay TVK: ”வாயில் வித்தை காட்டுவது நமது வேலை அல்ல” - தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்
Vijay TVK: ”வாயில் வித்தை காட்டுவது நமது வேலை அல்ல” - தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்
IND vs NZ 1st Test:நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்:அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பும்ரா!
IND vs NZ 1st Test:நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்:அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பும்ரா!
Sleep Type: தூக்கத்துல இத்தனை நிலைகளா? வித்தியாசம் என்ன? எது மிக சிறந்தது? இந்த சண்டே இதை தெரிஞ்சுக்கலாமா?
Sleep Type: தூக்கத்துல இத்தனை நிலைகளா? வித்தியாசம் என்ன? எது மிக சிறந்தது? இந்த சண்டே இதை தெரிஞ்சுக்கலாமா?
GST Exemption: ஜிஎஸ்டி வரியை குறைக்கும் முடிவுக்கு வந்த மத்திய அரசு - இன்சூரன்ஸ், வாட்ச் தொடங்கி குடிதண்ணீர் வரை..!
GST Exemption: ஜிஎஸ்டி வரியை குறைக்கும் முடிவுக்கு வந்த மத்திய அரசு - இன்சூரன்ஸ், வாட்ச் தொடங்கி குடிதண்ணீர் வரை..!
Womens T20 Worldcup Final: மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனல் - தென்னாபிரிக்க Vs நியூசிலாந்து பலப்பரீட்சை, முதல் வாய்ப்பு யாருக்கு?
Womens T20 Worldcup Final: மகளிர் டி20 உலகக் கோப்பை ஃபைனல் - தென்னாபிரிக்க Vs நியூசிலாந்து பலப்பரீட்சை, முதல் வாய்ப்பு யாருக்கு?
Breaking News LIVE 20th OCT 2024: இன்று 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - எங்கெல்லாம் தெரியுமா?
Breaking News LIVE 20th OCT 2024: இன்று 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - எங்கெல்லாம் தெரியுமா?
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது -  சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
Embed widget