’அண்ணாமலை பெஸ்ட் – கூட்டணியை விட்டு வெளியேற காரணம் இதுதான்’ டிடிவி தினகரன் அதிரடி..!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஏன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது என்பதை டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் அறிவார்கள் என்றும், எங்களுக்கு என்ன இடர்பாடு என்பதை அறிந்த அவர்கள் அதனை சரிசெய்தால் மீண்டும் NDA கூட்டணிக்கு செல்வது குறித்து பரிசீலனை செய்வோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதோடு, கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கு பாஜக காரணம் அல்ல என்றும், எங்கள் தொண்டர்களின் கருத்தால் மட்டுமே வெளியேறியதாகவும் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
எதற்கும் அடிபணியமாட்டேன்
தான் எதற்கும் எந்த அழுத்தத்திற்கும் அடி பணிய மாட்டேன் என்றும் அந்த தைரியம் ஜெயலலிதாவிடமிருந்து தனக்கு வந்ததாகவும் கூறியுள்ள டிடிவி தினகரன், விரைவில் கூட்டணியை அறிவிப்போம் என்றும் நாங்கள் பங்குபெறும் கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணையவேண்டும் என்பதுதான் முதல் விருப்பம் என்றும் அதற்கு அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.
நயினார் சரியில்லை ; அண்ணாமலை பெஸ்ட்
அதுமட்டுமின்றி, ஒபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியபோது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பதில் ஆணவத்தனமானது என்றும் அவர் கூட்டணி கட்சிகளை கையாளும் விதம் சரியில்லை என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலை மாநில தலைவராக இருந்தவரை கூட்டணியை அவர் சரியாக கையாண்டார் என்றும் நயினாருக்கு அண்ணாமலை மாதிரி செயல்பட தெரியவில்லை என்றும் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)






















