TN Local Body Election: எடப்பாடி தொகுதியில் மீண்டும் கெத்து காட்டிய அதிமுக...!
மொத்தமுள்ள 10 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் 8 ஊராட்சிகளில் திமுகவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் திமுகவை சேர்ந்த 8 ஊராட்சி தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட இரண்டு பேர் வென்றனர். மாவட்ட கவுன்சிலர் தேர்தலிலும் திமுக வேட்பாளர் வெற்றி.
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் சேலம் மாவட்டத்தில் காலியாக இருந்த ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 10 ஊராட்சி மன்ற தலைவர்கள் 23 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 35 பதவிகள் காலியாக உள்ளது. இவற்றில் 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 24 பதவிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கியது முதல் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்தனர். சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் 8 ஊராட்சிகளில் திமுகவை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் போட்டியிட்ட இரண்டு பேர் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நான்கு இடங்களிலும் அதிமுக ஆதரவாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர். குறிப்பாக , நங்கவள்ளி ஒன்றியம் கரிக்காப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் 1,064 வாக்குகள் பெற்று எதிர்த்துப் போட்டியிட்ட திமுக ஆதரவு வேட்பாளரை விட 220 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக மீண்டும் ஒரு முறை தனது முழு பலத்தை நிரூபித்துள்ளது.
சேலம் மாவட்ட ஊராட்சி குழு 10 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தற்செயல் தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் உட்பட 11 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் 44,752 வாக்குகள் பதிவானது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட சம்பு சண்முகம் 10,472 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர், மொத்தம் 26,531 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 16,059 பெற்றோர். இதன் மூலம் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 9 பேருக்கு டெபாசிட் காலி செய்தார் சண்முகம். இதேபோன்று பனமரத்துப்பட்டி 9 வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில், திமுக வேட்பாளர் சுரேஷ் குமார் 1771 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு அதிமுக மூன்றாம் இடம் பிடித்து டெபாசிட் இறந்தது. வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக வேட்பாளர்கள் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.