நீங்க யோசிங்க..ஆஃப்ட்ரால்..ஆளுநர்: வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!
எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த ஆளுநரை மாற்றக் கூடாது, ஏனென்றால் அப்போதுதான் மக்களுக்கு நம்மிடம் செல்வாக்கு வந்து கொண்டே இருக்கும், அவர்களுக்கு போகும், இப்போதும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்

துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசுக்குத்தான் உள்ளது உள்ளிட்ட ஆளுநர் ஒப்புதல் வழங்காத மசோதாக்களை, நிறைவேற்றம் செய்யப்பட்டதாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், கல்வியாளர்கள் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ' மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு ' எனும் தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியல் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது , மாணவர்களே நாளைய தலைவர்கள் நீங்கள்; நீங்களே யோசிச்சு பாருங்க, முதல்வர் ஆகி, திட்டங்களை நிறைவேற்றினால், ஆஃப்ட்ரால் ஒன்றிய அரசின் ஏஜென்ட்டாக நியமிக்கப்பட்டிருக்க கூடிய தற்காலிகமாக தங்கியிருக்க கூடிய ஆளுநர் ஒருவரால் தடுத்த நிறுத்த முடியும் என்றால், மக்கள் போடுகிற வாக்குக்கு என்ன மரியாதை; தேர்தல் எதுக்கு நடத்துனும்.
ஆளுநர் பதவி என்பது எந்த பதவி இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட். மாணவர்களே, ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவது அரசு, வசதிகளை செய்து தருவது அரசு, ஆனால் உங்களை நிர்வகிக்கும் துணை வேந்தர்களை நியமிப்பது ஆளுநர் என்றால் என்ன நியாயம். அதனால்தான் நீதிமன்றம் சென்றோம். பல ஆண்டுகளாக இருந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றம் முடிவு கட்டியுள்ளது.
எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த ஆளுநரை மாற்றக் கூடாது, ஏனென்றால் அப்போதுதான் மக்களுக்கு நம்மிடம் செல்வாக்கு வந்து கொண்டே இருக்கும், அவர்களுக்கு போகும், இப்போதும் இல்லை என்பது வேறு எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மேலும் பேசுகையில், கல்வி நிலையங்களில் அறிவியல் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் மூட நம்பிக்கையை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
படிப்பு பயனற்றது என்று யாராவது சொன்னால், அவர்களை சைலண்ட்டாக உங்களுடைய வாழ்க்கையில் இருந்து அவாய்டு செய்யுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களிடம் தெரிவித்தார்.





















