KP Munusamy: திமுக - அதிமுக இடையேதான் போட்டியே; இருவரும் அடித்துக் கொள்ள வேண்டும்.. சட்டமன்றத்தில் கே.பி. முனுசாமி பேச்சு..!
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக இடையேதான் போட்டி எனவும், இருவரும் அடித்துக் கொள்ள வேண்டும் எனவும் சட்டசபையில் அதிமுக எம்.எல். ஏ., கே.பி. முனுசாமி பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக இடையேதான் போட்டி எனவும், இருவரும் அடித்துக் கொள்ள வேண்டும் எனவும் சட்டசபையில் அதிமுக எம்.எல். ஏ., கே.பி. முனுசாமி பேசியுள்ளார்.
மேலும் அவர், உங்களை அதாவது திமுகவை எதிர்த்தால் தான் எங்களால் அதாவது அதிமுகவால் அடுத்து ஆட்சிக்கு வர முடியும் எனவும் பேசியுள்ளார்.
ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில் அதிமுக பாஜக இடையே சமீபகாலத்தில் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் சட்டமன்றத்தில் இவர் பேசியுள்ளாதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
நேற்று, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை டெல்லி சென்ற போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது “ கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்வதை நல்லதாக பார்க்கிறேன். பா.ஜ.க. வளர்ச்சியை ரசிக்க விரும்புவில்லை என்பதை பார்க்கிறேன்.அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை என பேசியுள்ளார். மேலும், கூட்டணியில் இருந்து கொண்டு கூட்டணி கட்சிகளை வளர்க்க எந்த அரசியல் கட்சியும் விரும்பாது. கூட்டணிக் கட்சிகளை வளர்க்க நினைப்பவர்கள் முட்டாள்கள் என அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். பாஜக வளர்ச்சியை அதிமுக விரும்பவில்லையோ என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.
இதனால் அதிமுக பாஜக இடையிலான மோதல் மீண்டும் அதிகரித்து உள்ளது.