கவுன்சிலர்களை கடத்த முயற்சி... உருட்டுக்கட்டை அடி...உருண்டு ஓடிய உடன்பிறப்புகள்! களேபரமான பதவியேற்பு!
பட்டப்பகலில், பொது இடத்தில் வைத்து திமுகவினர் பதவிக்காக இரு தரப்பாக மோதிக் கொண்டனர். இதனால் அந்த பகுதியே களேபரமாய் காட்சியளித்தது.
ஒன்றிய பெருந்தலைவர் பதவியை கைபற்ற ஆதரவாளர்களை திரட்டுவதில் திமுகவினர் இடையே கோஷ்டி மோதல். காவல் துறை தடியடி நடத்தியதால் பதற்றம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 18 பேர் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று ஆலங்காம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
மொத்தம் 18 ஒன்றிய குழு உறுப்பினர்களில் 11 இடத்தில் திமுகவும், 4 இடத்தில் அதிமுக, 2 இடத்தில் பாமகவும், 1 இடத்தில் சுயேட்சை உட்பட 18 பேர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு ஆலங்காயம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவி ஏற்ப்பு விழா முடிந்து அனைவரும் வெளியில் வந்த நிலையில், ஆலாங்காயம் ஒன்றிய குழு பெருந்தலைவர் தலைவர் பதவியை கைப்பற்ற திமுகவினர் தங்களது ஆதரவு ஒன்றிய குழு பிரதிநிதிகளை அழைத்து செல்ல முயன்றதாகவும். இதனால் திமுக கட்சியினரிடையே இரு கோஷ்டிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதுள்ளது. பின்னர் இரு கோஷ்டியினரும் மோதிக்கொண்டதால் காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
திமுகவில் இரு தரப்பினர் ஒன்றிய பெருந்தலைவர் பதவியை கைப்பற்ற கவுன்சிலர்களின் ஆதரவை பெற போட்டியிட்டனர். இதற்காக பதவியேற்று வெளியே வந்த கவுன்சிலர்களை கடத்த முயற்சிகள் நடந்தது. ஆனால் அவரவர் தரப்பு ஆதரவாளர்கள் போட்டி போட்டு அவர்களை பாதுகாப்பாக காரில் ஏற்றிச் சென்றனர். அவ்வாறு ஏற்ற முயற்சித்த போது, மற்றொரு தரப்பு அவர்களை தன்வசப்படுத்த முயற்சித்ததும், காரில் ஏற்ற ஏற்பாடு செய்ததும் மோதலுக்கு காரணமானது.
பட்டப்பகலில், பொது இடத்தில் வைத்து திமுகவினர் பதவிக்காக இரு தரப்பாக மோதிக் கொண்டனர். இதனால் அந்த பகுதியே கலேபரமாய் காட்சியளித்தது. அவர்களை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத்த போதும், போலீசாருக்கே அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இதனால் வேறுவழியின்றி அவர்களை விரட்டியடிக்கும் வேலையில் போலீசார் இறங்கினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்