மேலும் அறிய

பாராளுமன்ற திறப்பு விழா பத்திரிகையில் முதல் பக்கத்தில் சங்கராச்சாரியார் படம் ஏன் இடம்பெற வேண்டும்? - ராமரவிக்குமார்

மத்திய அரசு வெளியிட்டுள்ள பாராளுமன்ற திறப்பு விழா பத்திரிகையில் முதல் பக்கத்தில் போற்றுதலுக்கு உரிய திருவாவடுதுறை ஆதீனத்தின் படத்தை போட்டிருக்கலாம்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் இந்து தமிழர் கட்சி நிறுவனத்தலைவர் ராம.ரவிக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லியில் 28-ம் தேதி திறக்கப்பட உள்ள புதிய பாராளுமன்ற கட்டடத்தில் பாரதநாடு சுநத்திரம் பெற்ற சமயத்தில் தமிழ்சமூதாயத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய திருவாவடுதுறை ஆதீன தம்பிரான் சுவாமிகளால் செய்யப்பட்ட சைவநெறி செங்கோல் கோலோருபதிகம் பாடி அரசால்வர் ஆணைநமதே என்ற பதிகமுற்றத்தோடு திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை, ஓதுவாமூர்த்திகள் மாணிக்கப்பிள்ளை ஆகியோருடன் சடைசாமி என்கின்ற தம்பிரான் சுவாமிகள் பாரதம் சுதந்திரம் பெற்றபோது பிரதமர் நேருவிடம் செங்கோலை கொடுத்தார்கள். 

பாராளுமன்ற திறப்பு விழா பத்திரிகையில் முதல் பக்கத்தில் சங்கராச்சாரியார் படம் ஏன் இடம்பெற வேண்டும்? - ராமரவிக்குமார்

அந்த செங்கோலை புதிய பாராளுமன்ற கட்டடத்தில் வைப்பதை இந்து தமிழர் கட்சி வரவேற்கிறது. தமிழையும், சைவத்தையும் கவுரவப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள ஆதீனகர்த்தர்களை மத்திய அரசு அழைத்து கௌரவித்துள்ளதை வரவேற்கிறோம்.  இச்சமயத்தில் இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என்று சில அரசியல் கட்சிகள் தெரிவிக்கின்றனர். அது அவர்கள் உரிமை. இருப்பினும், அவர்கள் அதில் கலந்துகொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறோம்.  நம்முடைய சமுதாயத்தினுடைய இந்த அடையாளங்களை ஒருசிலர் மாற்றுவதற்கு முயற்சிக்கிறார்கள் அதற்கு கண்டனத்தை தெரிவித்துகொள்கிறோம்.

பாராளுமன்ற திறப்பு விழா பத்திரிகையில் முதல் பக்கத்தில் சங்கராச்சாரியார் படம் ஏன் இடம்பெற வேண்டும்? - ராமரவிக்குமார்

1970-ம் ஆண்டிற்கு பிறகு காஞ்சி சங்கராச்சாரியார்  செங்கல் குறித்து பேசி இருக்கிறார். அதனால்தான் மக்களுக்கு இந்த விஷயம் தெரிந்தது என்று பொய்யான ஆவணங்களை நிறுவுவதற்கும், உண்மை வரலாறுகளை திருத்த முயற்சிக்கிறார்கள். காஞ்சி சங்கரமடத்தால்தான் இந்த வரலாறு வெளியில் தெரிந்தது என்பது எல்லாம் பொய்யானது. பிராமணர், பிராமணர் அல்லாதவர் என்ற பிளவுவாத அரசியலுக்கு இங்கே இடம் தந்துவிடக்கூடாது. அதற்கு கண்டனம் தெரிவித்துகொள்கிறோம். அரசுக்கு தவறான ஆவணங்களை கொடுத்தது யார்? டாக்டர் சுப்ரமணியம் என்பவர்தான் இதுகுறித்து தெரிவித்தார் என்று கூறுகின்றனர். செங்கோலுக்கும், சங்கரமடத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய அரசு வெளியிட்டுள்ள பாராளுமன்ற திறப்பு விழா பத்திரிக்கையில் முதல்பக்கத்தில் சங்கராச்சாரியார் படம் ஏன் இடம்பெற வேண்டும்? என் கேள்வி எழுப்பியவர், போற்றுதலுக்கு உரிய திருவாவடுதுறை ஆதீனத்தின் அப்போதைய குருமகா சன்னிதானம் படத்தை போட்டிருக்கலாம். ஆனால் பத்திரிக்கை முகப்பில் சங்கராச்சாரியார் படத்தை ஏன் போட்டார்கள்.

பாராளுமன்ற திறப்பு விழா பத்திரிகையில் முதல் பக்கத்தில் சங்கராச்சாரியார் படம் ஏன் இடம்பெற வேண்டும்? - ராமரவிக்குமார்

மத்திய அரசுக்கு தவறான தகவல் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் சரியான அழைப்பிதழ் அச்சடிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் தரப்பில் இப்படி ஒருசம்பவம் நடக்கவில்லை என்று ஜெயராம்ரமேஷ் தெரிவித்துள்ளார். அப்படியானால் செங்கோலை நேரு பெற்றுக்கொண்டாரா? இல்லையா? சைவபெருமக்கள், ஆதீனகர்த்தர்கள் கொடுத்த செங்கோல் இல்லை என்று மறுப்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். பிரதமர் கவனத்திற்கு இந்த விஷயங்களை கொண்டுசென்றது யார். செங்கோல் விஷயம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சைவமக்களுக்கும், தமிழர்களுக்கும் பெருமை. இந்த பெருமை வரலாற்றை மடைமாற்றம் செய்து தங்களுடைய செயலாள்தான் என்று கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டடோம். டெல்லிக்கு சென்றிருக்கக்கூடிய ஆதீன பெருமக்கள் அனைவரும் இந்த கருத்தை ஆதரிக்க வேண்டும்.

பாராளுமன்ற திறப்பு விழா பத்திரிகையில் முதல் பக்கத்தில் சங்கராச்சாரியார் படம் ஏன் இடம்பெற வேண்டும்? - ராமரவிக்குமார்

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன கர்த்தர்களும், தங்களது மடத்தின் பக்தர்கள், சிவனடியார்கள், சிவத்தொண்டு செய்பவர்கள் மூலம் வரும் 28-ம் தேதி செங்கோல் நிறுவக்கூடிய அதே நேரத்தில தமிழகத்தில் உள்ள சிவன்கோயில்களில் கோலோருபதிகம்பாடி, சிவவாத்தியம் முழங்க இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும். பிரிவுவாத அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம். அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். பாராளுமன்ற கட்டடம் பிரதமரால் திறப்பது பெருமை. ஜனாதிபதியை  புறக்கணித்துவிட்டார்கள் என்று கூறுபவர்கள் திரெளபதி முர்மு பதவியேற்றபோது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது நீலிகண்ணீர் வடிக்கின்றனர்” என்றார். அப்போது  இந்து புரட்சி முன்னணி மாவட்டதலைவர் ஜோதிகுமரன், மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார், இந்து தமிழர் கட்சி மாநில குழு உறுப்பினர் ஈசானசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
அமித் ஷா கூட்டத்தைப் புறக்கணிக்கிறாரா ரங்கசாமி? -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதிவால் பரபரப்பு!
அமித் ஷா கூட்டத்தைப் புறக்கணிக்கிறாரா ரங்கசாமி? -முன்னாள் முதல்வர் நாராயணசாமி பதிவால் பரபரப்பு!
அமித் ஷா தலைமையில் தென்மண்டல மாநாடு; ரங்கசாமி பங்கேற்காதது ஏன்?
அமித் ஷா தலைமையில் தென்மண்டல மாநாடு; ரங்கசாமி பங்கேற்காதது ஏன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget