மேலும் அறிய

திமுக ஆட்சியை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் மறைமுகமாக பல வியூகங்களை உருவாக்குகிறார்கள் - கீ.வீரமணி

அனைத்திற்கும் ஆளுநர் தாராளமாக கருத்து சொல்லட்டும். அண்ணாமலைபோல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் அருகே அமர்ந்து கொண்டு கருத்து சொல்லட்டும்.

திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தலைமையில் சமூக பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நாளொன்றிற்கு 2 மாவட்டங்கள் வீதம் நடத்தபட்டு வருகிறது. கடந்த 3 ம் தேதி ஈரோட்டில் தொடங்கிய தொடர்பயணம் வரும் 10 ம் தேதி கடலூரில் நிறைவு பெறுகிறது. இந்த பரப்புரை பயணத்தின் ஒரு  பகுதியாக நெல்லை தச்சநல்லூர் சாவடி திடலில் நடந்த கூட்டத்தில் பேசிய திராவிட கழக தலைவர் கீ விரமணி, தமிழகத்தின் ஆட்சியை போல் இந்தியாவில் வேறெங்கும் ஆட்சி நடக்கவில்லை என அனைத்து மாநில மக்களும் பொறாமை கொள்கின்றனர். "திமுக ஆட்சியை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் மறைமுகமாக பல வியூகங்களை உருவாக்குகிறார்கள்.

மனிதனுக்கு சுதந்திரம் மட்டும் முக்கியமல்ல, சமத்துவமும் சகோதரத்துவமும் மிக முக்கியமானது. அதைத்தான் தமிழகத்தில்  திராவிட மாடல் ஆட்சி  என்கிறோம், ஜாதி என்ற வர்னாஸ்ரம  அமைப்பை வைத்து கொண்டு சிலர் செயல்படுகிறார். காதலர்கள் தினத்திற்கு போட்டியாக பசுமாட்டை அரவணைக்க சென்றவர்கள் மனிதனை அரவணைக்க மறுக்கிறார்கள். ஒரே ரேசன் அட்டை, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே நாடு என சொல்லும் பாஜக ஆர்.எஸ்.எஸ் மோடி ஆட்சியில் சொல்வது இந்திய பண்முக தன்மைக்கு எதிரானது. அனைத்திலும் ஒரே என சொல்லும் அவர்கள் ஒரே ஜாதி என சொல்ல மறுக்கிறார்கள்.

திமுக ஆட்சியை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் மறைமுகமாக பல வியூகங்களை உருவாக்குகிறார்கள் -  கீ.வீரமணி

நாட்டில் சுதந்திரம் இருந்தால் மட்டும் போதாது சமத்துவம் வரவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் என்பதே திராவிட மாடல் தத்துவம். மக்களை மனித நேயத்துடன் நடத்த வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. அது தான் திராவிட மாடல். 50% பெண்களுக்கான இடஒதுக்கீட்டை கேட்காமலே கொடுத்தவர் திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின். 50% இட ஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில் இயற்றவிடாமல் தடுக்கிறார்கள். 90 ஆண்டுகளுக்கு முன்னாள் பெரியாரால் திராவிட இயக்கத்தில் போடபட்ட தீர்மானங்களே இன்றைய சட்டங்களாக இயற்றப்பட்டுள்ளது. பெண்களை பெற்றோம் கஷ்டபடுகிறோம் என்ற நிலையை மாற்ற உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ₹1000 திராவிட மாடல் ஆட்சியால் வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கடுமையான நிதி நெருக்கடியிலும் குழந்தைக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் அதிகமான கடனை வாங்கி கட்ட வேண்டிய வட்டியையும் அதிகமாக்கி எல்லா துறைகளிலும்  போராட வேண்டிய நிலை தற்போது வருகிறது.1 லட்சத்து 163 எம்.பி.எஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடப்பதில் தமிழகம் தான் முதலிடம். தமிழக குழந்தைகள் முன்னுக்கு வருவதை தடுக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் குலகல்வி திட்டம் கொண்டு வரப்படுகிறது. தமிழக ஆளுநர் அவரது வேலையை விட்டு சனாதன பிரச்சாரத்தை செய்து வருகிறார். ஆன்லைன் சூதாட்டம் என்பது மகாபாரத கலாச்சாரம். விஞ்ஞானம் வளர்ந்த நிலையிலும் சூதாட்டம் என்ற கொடுமை உள்ளது. ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடுமையை தடுக்க பல போராட்டம் நடத்தியதன் விளைவாக அதிமுக ஆட்சியில் அவசர கதியில் சட்டம் நிறைவேற்றபட்டது.

திமுக ஆட்சியை நேரடியாக எதிர்க்க முடியாதவர்கள் மறைமுகமாக பல வியூகங்களை உருவாக்குகிறார்கள் -  கீ.வீரமணி

தற்போது திமுக ஆட்சியில் குழு அமைத்து சட்டம் இயற்றியும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் ஆளுநர் தரவில்லை. திராவிடமாடல் ஆட்சி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க கூடாது என போட்டி அரசாங்கம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் என்ன செய்தாலும் காலூன்ற முடியாது என பாஜக குறுக்கு வழியில் ஆளுநரை வைத்து வேலை செய்கிறது. அனைத்திற்கும் ஆளுநர் தாராளமாக கருத்து சொல்லட்டும். அண்ணாமலை போல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் அருகே அமர்ந்து கொண்டு கருத்து சொல்லட்டும். காரல்மார்க்ஸ், டார்வினை ஆகியோர் பற்றி தெரியாமல் ஆளுனர் பேசுகிறார்.பல இடையூறுகள் செய்தால் , ஆத்திரபட்டு கலவரம் செய்வார்கள் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என ஆட்சியை கவிழ்க்கலாம் என நினைக்கிறார்கள். மக்கள் என்ற பாறையால் கட்டபட்டது திராவிடமாடல் ஆட்சி , மணல் கோட்டையால் கட்டபட்டதல்ல. வளர்ச்சி வளர்ச்சி என வாயால் பேசியவர்கள் மத்தியில் செயலால் அனைத்தையும் செய்துகாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சி. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கும் பெயர் வந்துவிடும் என்ற காரணத்தினாலேயே ராமர் பாலம் என்ற வார்த்தையை முன்வைத்து சுப்பிரமணிய சுவாமி போன்றோர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். சேது சமுத்திர திட்டம் தடைபட்டதால் தான் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது. வேலை இல்லா இளைஞர்களை வைத்து கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளது. ராமர் சேதுவை தேசிய அடையாளமாக அறிவிக்க முடியுமா என பாஜக உறுப்பினர் கேட்டதற்கு ராமர் பாலத்திற்கு ஆதாரம் இல்லை என பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜிதேந்தர சிங் தெரிவித்துவிட்டார். சேது சமுத்திரத்தில் அமைக்கும் கால்வாய் தமிழன் கால்வாயாக அமையும். அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், நாட்டின் பொருளாதாரம் உயரும் நாட்டிற்கு பாதுகாப்பாக அமையும்" என பேசினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget