விஜய் சொல்வது போல் நடக்க வாய்ப்பில்லை - திருமாவளவன் பதிலடி
விஜய் சொல்வது போல் 1967 , 1977 - ல் நடந்த மாற்றங்கள் , 2026 - ல் நடப்பதற்கான கள நிலவரம் தமிழகத்தில் இல்லை - திருமாவளவன்

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;
நெல்லை கவின் ஆணவ படுகொலை சம்பவம் நடந்த உடனேயே தகவல் வெளியாகி விட்டது. உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கு கண்டனங்களை பதிவு செய்து விட்டோம். உடனடியாக காவல்துறை அதிகாரிகளை அணுகி இது தொடர்பாக கோரிக்கை எழுப்பியது விடுதலை சிறுத்தைகள் தான் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றிருந்த சூழலில் உடனடியாக வர இயலாததால் தற்போது டெல்லியில் இருந்து இங்கு வந்துள்ளேன். அடுத்த விமானத்தில் தூத்துக்குடி சென்று கவின் குடும்பத்தாரை சந்திக்க உள்ளேன். மேலும் எனது தலைமையில் நெல்லையில் ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது.
ஆணவ படுகொலைகள் வெறும் சட்டத்தால் மட்டுமல்லாமல், உளவியல் ரீதியாக சமூக ரீதியாக மாற்றுவதற்கு என்ன செய்வது என்று எழுப்பிய கேள்விக்கு ;
சட்டம் என்பது ஒரு தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தக்கூடிய ஒன்று அதுவே இயற்றப்படவில்லை. அதுவே உயர் உளவியல் ரீதியாக ஆளும் தரப்பிலே அதிகார வர்க்கத்திலே ஒரு தயக்கம் இருக்கிறது. இப்படி ஒரு கொடூரம் நடக்கிறது இந்தியா முழுக்க நடக்கிறது. பெற்ற பிள்ளையை கூட கொடூரமாக படுகொலை செய்யக் கூடிய உளவியல் இருக்கிறது. இதை ஒரு தேசிய அவமானமாக கருத வேண்டும். பெற்ற பிள்ளைகளையே கொடூரமாக கொலை செய்யும் அளவிற்கு தூண்டுகிறது என்றால் சாதி எப்படி ஒரு மனநோயாக மாறி உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலிலே சட்டம் இயற்றுவதற்கு என்ன தயக்கம் ?
ஆணவக் கொலை என்பது தலித்துகளுக்கு மட்டும் நடப்பது அல்ல மாற்று சாதியினரும் சாதி விட்டு சாதி திருமணம் செய்தால் ஆணவக் கொலை செய்கிறார்கள்.
தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் ;
காவல் துறையை சார்வந்தர்களாக இருந்தாலும் , எப்படியானவர்களாக இருந்தாலும் பெற்றோரின் உளவியல் என்பது சாதி கௌரவம் தான் தன்னுடைய குடும்ப கவுரவம் என்று எண்ணுகிறார்கள். அதனை ஒழிப்பதற்கு ஜனநாயக சக்திகள் ஒன்றுபட வேண்டும். நாடக காதல் என்று சொல்பவர்கள் சொன்ன கருத்து இது உனக்கு என்ன தகுதி இருக்குது உனக்கு என்ன பொருளாதாரம் இருக்கிறது என்று ஒரு குறிப்பிட்ட சாதிக்கான பிரச்சனையாக காதலையும் , காதல் திருமணங்களையும் பரப்புரை செய்ததன் விளைவாக இது போன்ற விவாதங்கள் நடக்கின்றன. காதல் என்பது யாரும் சொல்லி வருவதல்ல திட்டமிட்டு தூண்டி உருவாக்க முடியாது. ஆனால் அந்த அளவிற்கு பிற்போக்குத்தனமான பிரச்சாரம் இந்த மண்ணில் மேற்கொள்ளப்பட்டது. அதனுடைய விளைச்சல் தான் இன்றைக்கு இந்த மாதிரியான பதிவு படுகொலைகள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் 1967 , 1977 போன்ற மாற்றத்தை உருவாக்கும் என்று விஜய் கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் ;
அவர் அப்படி எதிர் பார்க்கலாம் ஆனால் கிரவுண்ட் ரியாலிட்டி அப்படி இல்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்ததைப் போன்ற சூழல் தமிழ்நாட்டில் தற்போது கிடையாது. அடுத்தடுத்து எத்தனையோ துறை கலைஞர்கள் அரசியலுக்கு வந்தார்கள் பெரும் செல்வாக்கோடு வந்தார்கள். ஆனால் மக்கள் அவ்வளவு இலகுவாக அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாடு திரைப்படத்தை நம்பி தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய மாநிலம் என்று விமர்சித்த காலம் மாறிப் போய்விட்டது. யார் தேவையோ , யார் தேவை என்று மக்கள் தேர்வு செய்வார்கள் 2026 தேர்தல் நமக்கு அதை உணர்த்தும்.





















