மேலும் அறிய

Thirumavalavan: விசிக ஆஃபிஸ்க்கு சோஃபா வந்தது ஏன்? முதலமைச்சராக வந்த ஆஃபர்- திருமா பேட்டி!

விசிக அலுவலகத்துக்கு புதிய சோஃபா வந்தது குறித்துப் பேசிய திருமாவளவன், அது ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட சோஃபா என்று தெரிவித்துள்ளார்.

என்னை முதல்வராக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து எதுவும் எனக்குத் தெரியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக அலுவலகத்துக்கு புதிய சோஃபா வந்தது குறித்துப் பேசிய அவர், அது ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட சோஃபா என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

’’தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, என்னை முதலமைச்சராக சில முயற்சிகள் எடுக்கப்பட்டதாக, பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருப்பதாக சில நண்பர்கள் மூலம் எனக்குத் தகவல் கிடைத்தது. ஆனால் தனிப்பட்ட வகையில் எதுவும் எனக்குத் தெரியாது. என்ன உரையாடல்கள் நடந்தன என்று தெரியவில்லை.

தவெகவுடன் பேரம் பேசினோமா?

ஆனால் அதற்காகத்தான் நாங்கள் காத்திருக்கிறோம் என்று செய்தி உலவி வருகிறது. தவெகவுடன் பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் களங்கத்தை வாரி இறைத்தார்கள். ஆனால் அதில் துளியும் உண்மையில்லை.

இடதுசாரிக் கட்சிகளின் முடிவை ஒட்டியே முடிவை அறிவிப்போம் என்று கூறியிருந்தோம். அவர்களின் முடிவை அறிந்தபிறகு, கம்யூனிஸ்டுகளின் முடிவை முன்வைத்து எங்கள் தோழர்களுடன் கலந்து ஆலோசித்தோம்.

சோஃபா பின்னால் முதல்வர்

விசிக அலுவலகத்துக்கு வந்த சோஃபா, ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட ஒன்று. உதயநிதி சட்டப்பேரவையில் விசிகவைச் சொல்லவில்லை. அதிமுகவில் உருவாகி உள்ள புதிய அணி அல்லது சட்டமன்ற உறுப்பினர்களைச் சொல்லி முன்வைக்கப்பட்ட கருத்து என்று கருதுகிறேன்’’ என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வாய்ப்பு வந்தது. அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில், திருமாவளவனுக்கு வாய்ப்பு வந்துள்ளது. அதனை ஏற்றுக் கொள்ளலாமா என்றோம்.  

அதற்கு எடப்பாடி பழனிசாமி, ’’இருந்தால் நான் முதலமைச்சர் ஆக இருப்பேன், இல்லாவிட்டால் எதிர்க் கட்சியாகச் செயல்படுவோம் என்று தெரிவித்ததாக குற்றம் சாட்டி இருந்த நிலையில், அதற்கு திருமா பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டில் தலித் முதல்வர் ஆகவே முடியாது

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆகியிருந்தாலும், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஏற்கெனவே வேதனை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
Vijayakumar IPS : ’சட்டத்தின்படி வந்திருக்கிறோம்’ உதயநிதியை கைது செய்த போலீஸ் அதிகாரி - யார் இந்த விஜயகுமார் IPS..?
’சட்டத்தின்படி வந்திருக்கிறோம்’ உதயநிதியை கைது செய்த விஜயகுமார் IPS..!
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Embed widget