மேலும் அறிய

அதிமுக - வை அழைத்த திருமாவளவன்: சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை சவுந்தராஜன்

திருமாவளவன் கூட்டணிக்கு ஒரு முடிவு கட்டுகிறாரா ? இல்லையென்றால் கூட்டணியை முடிவு கட்டுகிறாரா ? என்பது தான் எனது சந்தேகம்

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை தொண்டர்களுக்கு வழிகாட்டும் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர் முத்துரங்க சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை தொண்டர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பாஜக மாநில முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் ;

பாஜக சார்பாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  தென் சென்னை மற்றும் கிருஷ்ணகிரியில் இருந்து நீலகிரி வரை 11 மாவட்டங்களுக்கு நான் பொறுப்பாளராக இருக்கிறேன்.  தென் சென்னையில் உறுப்பினர் சேர்க்கை பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் சென்று இந்த பணியை மேற்கொண்டோம். இன்று சைதாப்பேட்டை தி நகர் மைலாப்பூர் சட்டமன்ற பகுதிகளுக்கு சென்று உறுப்பினர் சேர்க்கை சேர்த்தோம்.  மிகுந்த உற்சாகமாக மக்கள் கலந்து கொண்டார்கள் என தெரிவித்தார். சிறுபான்மை மக்கள் கூட மிக ஆர்வமாக வந்து கலந்து கொண்டனர். அகில  பாரத அளவில் மூன்று கோடி பேர் சேர்ந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் பல லட்சம் பேர் சேர்ந்து வருகிறார்கள் மகுந்த உற்சாகத்தோடு பணியாற்றி வருகிறோம் என தெரிவித்தார்.

பாஜக மத்தியில் நன்றாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு சென்று நமது நாட்டின் பெருமையை முற்றிலுமாக குலைத்து வருகிறார். வேண்டும் என்று செய்கிறார்.  பிரதமரை பற்றி பேசினால் தான் அவருக்கு விளம்பரம் கிடைக்கும் என்பதற்காக அவருக்கு போகஸ் கிடைக்கும் என்பதற்காக தப்பு தப்பாக பேசுகிறார்.   மாணவர்கள் மத்தியில் பேசும்போது ஒரு கருத்தை பேசி இருக்கிறார். தேர்தல் நியாயமாக நடைபெற வில்லை என பேசி இருக்கிறார் அப்போ தமிழகத்தில் 40க்கும் 40 வெற்றி பெற்றது எப்படி கிடைத்தது தேர்தல் நடைபெறவில்லை என்றால் தேர்தல் ஆணையத்தை அவர் குறைத்து மதிப்பிடுகிறார்.  ஒரு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றிருக்கிறது.   தமிழகத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா உங்கள் கூட்டணி கட்சி தலைவர்களை சொல்லி இருக்கிறார் உங்கள் வெற்றி உண்மையானது அல்ல என்று.  நூறு தொகுதி கூட நீங்கள் தாண்டவில்லை கார்கே சொல்லுகிறார் இன்னும்  சில இடங்கள் வெற்றி பெற்று இருந்தால் பலபேர் சிறையில் தள்ளி இருப்போம் எனக் கூறுகிறார். அதிக தொகுதி ஜெயித்திருந்தால் நாட்டிற்கு நல்லது செய்வோம் என பேசவில்லை இன்னைக்கும் அந்த எமர்ஜென்சி புத்தி தான் உள்ளது. எமர்ஜென்சி புத்தி வைத்துக்கொண்டு ஜனநாயகத்தை பற்றி அந்நிய நாட்டுக்கு போய் ராகுல் காந்தி பேசி வருகிறார் வன்மையாக கண்டிக்கத்தக்கது ராகுல் இந்திய ஜனநாயகத்தை மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்றால் கமலஹாரிஸ் மற்றும் ட்ரம் கூட சென்று ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிடட்டும் இந்தியாவுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை இந்திய திருநாட்டை மிக மோசமாக பேசி வருகிறார் வன்மையாக கண்டிக்கக் கூடியது சீனாவை பற்றி பேசுகிறார் மிக மோசமான சீன  கொள்கை வைத்திருந்தது. அவர்கள் கட்சிக்கு சேர்ந்தவர்கள் சீனா கட்சிக்காரர்கள் போர்டு வைத்திருக்கிறார்கள். ராகுல் காந்தி தனது பேச்சுக்கு முற்றிலுமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். 

திருமாவளவன் மீது எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது அவருக்கு 21 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறதா அக்டோபர் 2 அவரது மாநாடு நடக்குமா நடக்காதா ? மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது அது இருக்கட்டும் அதிமுகவை கூப்பிட்டு இருக்கிறார் விஜயை கூப்பிட்டு இருக்கிறார். குடிச்சவங்களை பத்தி மாநாட்டை நடத்துகிறாரா இல்ல புதிய முடிச்சை போடுகிறாரா என தெரியவில்லை அதனால் கூட்டணிக்கு ஒரு முடிவு கட்டுகிறாரா இல்லையென்றால் கூட்டணியை முடிவு கட்டுகிறார் என்பதுதான் எமது சந்தேகமாக இருக்கிறது அதிமுக கட்சியோடு முடிவெடுக்கிறாரா கூட்டணிக்கு முடிவு கட்டுவதாகவும் கூட்டணி பற்றிய முடிவெடுக்கவதாகவும் எனக்கு தெரிகிறது மது ஒழிப்பு என்ற பெயரை வைத்துக்கொண்டு சலசலப்பை ஏற்படுத்த வேண்டும் நினைக்கிறார். மூன்று வருடம் கூட இருந்து அதைப் பற்றி பேசவில்லை பெரிய பிரச்சனைகள் நடந்த போது பேசவில்லை எல்லாவற்றையும் அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கிறார். 

என்றைக்குமே அண்ணன் திருமாவளவன் பாஜகவை அழைக்க மாட்டார் என தெரியும் அவர்கள் அழைக்கவில்லை என்பதற்காக மது ஒழிப்பில் நாங்கள் தீவிரமா இல்லை என பொருள் அல்ல மது ஒழிப்பில் தீவிரமாக இருக்கிறோம் நாங்கள் மாநாடு நடத்தியும் கூட்டம் நடத்தினோம் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அவர்கள் ஒரு போலி மது ஒழிப்பு போலி மதச்சார்பின்மை போல் போலி மது ஒழிப்பை நடந்தி கொண்டிருக்கிறார்கள்.  நாங்கள் உண்மையான மது ஒழிப்பாழிகள் என தெரிவித்தார்.

முதலில் நமது கல்வித்துறை அமைச்சர் பதவி விலகட்டும் செல்வ பெருந்தகை ஏன் அதை சொல்லவில்லை பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது பள்ளியில் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதற்கு பதிலாக குழந்தை பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது.  இதற்கு அன்பில் பொய்யாமொழி என்ன சொல்லுகிறார். சில பேரை கைது செய்ய காட்டக் கூடிய தீவிரத்தை ஆசிரியர் பெருமக்கள் 30 ஆயிரம் பேருக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் அவரது பிரச்சனை தீர்க்கவில்லை. பள்ளி கல்வித்துறை தள்ளாடி கொண்டிருக்கிறது. முதலில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்யட்டும் புதிய கல்விக் கொள்கையை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டம் ஆனால் இங்கே கல்வியை குறைப்பதற்காக அதனை திட்டங்களையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.   மாநகராட்சி பள்ளியில் 5 வகுப்புகள் 300 சதுர அடிக்குள் நடத்தப்பட்டு வருகிறது.  பள்ளிக்கல்வித்துறை எங்கே சென்று கொண்டிருக்கிறது.  திருமாவளவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது செல்வப்பெருந்தகைக்கு சந்தேகம் வந்துவிட்டது நேற்று அஞ்சலி செலுத்த போன இடத்தில் எங்களுக்கே பாதுகாப்பு இல்லை என எந்த விதத்தில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை கூட்டணி கட்சிக்கு இந்த நிலைமை என்றால் நாங்கள் என்ன செய்வது கூட்டணி கட்சிகளிடம் இருந்து ஒரு எதிர்ப்பு குரல் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்து இருக்கிறது என்பதும் 2026 திமுக உடைய இருந்தால் நம்பிக்கையாக வெற்றி கிடைக்காது என்பதை ஒவ்வொரு கட்சியாக உணர்ந்து ஆரம்பித்திருக்கிறது உணர ஆரம்பித்திருக்கிறது. 

பாஜகவில் அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.  மைத்திரையின் கருத்து அவரது சொந்த கருத்து தேர்தல் சமயத்தில் அவருக்கு நிறைய பணிகள் கொடுத்தோம். அது குறித்து அவரிடம் நீங்கள் கேட்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
Fengal Cyclone LIVE: இன்று மாலை உருவாகும் ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "வெற்றி மாறன்தான் வாத்தியார்.. நான் ஸ்டூடண்ட்தான்" உருக்கமாக பேசிய விஜய் சேதுபதி
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
Vetrimaaran: திமுகவிற்கு ஆதரவு, விஜய் மீது இவ்வளவு வன்மமா? வெற்றிமாறனின் விடுதலை 2 டிரெய்லரால் வெடித்த சர்ச்சை
Embed widget