சசிகலாவிற்கு துரோகம்.. இபிஎஸ் சென்ற வாகனம் மீது செருப்பு, கல் வீச்சு.. பசும்பொன்னில் பரபரப்பு!
மரியாதை செலுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறியபோது, சசிகலாவிற்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி என ஒரு தரப்பினர் கோஷமிட்டனர். இதனால், அங்கு சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தி விட்டு பசும்பொன் நினைவிடத்தை விட்டு வெளியேறி முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் செல்லும் வழியில் உள்ள குளம் அருகே இபிஎஸ் வாகனம் சென்ற போது அதிமுக ஆட்சியில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகவேல் மற்றும் பொதி குளத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி ஆகிய இருவரும் இபிஎஸ் சென்ற வாகனம் மீது செருப்பு மற்றும் கல்லை வீசியுள்ளனர்.
அவர்கள் வீசிய கல் மற்றும் செருப்பு இபிஎஸ் சென்ற காருக்கு முன் சென்ற கார் மீது விழுந்தது. இதனையடுத்து இருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், மரியாதை செலுத்திவிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியேறியபோது, சசிகலாவிற்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி என ஒரு தரப்பினர் கோஷமிட்டனர். இதனால், அங்கு சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பசும்பொன் தேவர் குருபூஜை விழா: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மரியாதை :
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி விழா, 61வது குரு பூஜை விழாவில் முன்னாள் முதல்வர் , சட்டமன்ற எதிர்கட்சித்தவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேவர் விலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன்அவைத் தனவர் தமிழ்மகன் உசேன், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் த ண்டுக்.ல் சீனிவாசன் , நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜீ , Dr. மணிகண்டன், விஜயபாஸ்கர், வளர்மதி, அன்வர்ராஜா, டே.டி.ராஜேந்திர பாலாஜி, கோகுல இந்திரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் பிரபாகரன், Dr.முத்தையா, கழக மகளிரணி இணைச்செயலாளர் கீர்த்திகா, மாவட்ட செயலாளர் எம்.எ.முனியசாமி, ஆகியோர் மரியாதை செலுத்தினர்.