மேலும் அறிய

PM Modi : ’பிரதமர் மோடியின் பசும்பொன் வருகைத் திட்டம்’ பாஜக Vs திமுக ஐ.டி விங் இடையே நடைபெறும் வார்த்தை போர்..!

பிரதமர் மோடி பசும்பொன் வருவது குறித்தான பாதுகாப்பு விஷயத்தில் மாநில அரசு எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை என தகவல் - CTR நிர்மல்குமார்

அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை பாஜகவினர் உள்ளிட்ட வலதுசாரி அமைப்பினர் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பகிர்ந்துவந்தனர். அதனடிப்படையில் ஊடகங்களில் கூட செய்திகள் வெளியாகின.PM Modi : ’பிரதமர் மோடியின் பசும்பொன் வருகைத் திட்டம்’ பாஜக Vs திமுக ஐ.டி விங் இடையே நடைபெறும் வார்த்தை போர்..!

பிரதமர் பசும்பொன் வருகையின் போது, மதுரை தமுக்கத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அங்கிருந்து பசும்பொன் சாலை மார்க்கமாக செல்வார் என்றும் தமுக்கத்தில் வைத்துதான் காங்கிரஸ் ஆட்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டார் என்பதால், காங்கிரஸ் எதிர்ப்பாளர் தேவர் என்று காட்டுவதற்காக இந்த ஏற்பாடு என்றும் பகிரப்பட்டு வந்தது. அதோடு, முக்குலத்தோர் சமுதாயத்தினரின் நீண்டநாள் கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரையும் பிரதமர் இந்த வருகையின்போது சூட்டுவார் என்றும் செய்திகள் கச்சைக் கட்டி பறந்தன.PM Modi : ’பிரதமர் மோடியின் பசும்பொன் வருகைத் திட்டம்’ பாஜக Vs திமுக ஐ.டி விங் இடையே நடைபெறும் வார்த்தை போர்..!

அதோடு, முக்குலத்தோர் வாக்குகளை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பக்கம் திருப்புவதற்கான உத்தியை, பாஜக வகுத்திருப்பதாகவு அதன் அடிப்படையிலேயே பிரதமர் மோடி தமிழ்நாடு வரவிருப்பதாகவும், இது அதிமுகவிற்கும் திமுகவிற்கும் செக் வைக்க பாஜக வகுத்திருக்கும் திட்டம் என்றும் பேசப்பட்டது.

பிரதமர் வருகை குறித்து பல்வேறு தகவல்கள் பரவிவந்தாலும் பிரதமர் அலுவலகமோ, தமிழக பாஜக தலைமையோ அது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பகிர்ந்திருந்த பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் CTR நிர்மல்குமார், ‘மாநில அரசு பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித உறுதிமொழியும் கொடுக்காத காரணத்தினால் இந்த வருடம் பிரதமர் வருவது தள்ளிப்போனதாக தகவல்.’ என பதிவிட்டிருந்தார்.

பிரதமர் மோடியுடன் CTR நிர்மல்குமார்
பிரதமர் மோடியுடன் CTR நிர்மல்குமார்

அதன்பிறகு, அவரது இந்த பதிவிற்கு திமுகவினர் கடுமையான எதிர்ப்புகளை ட்விட்டரில் பதிவு செய்யத் தொடங்கினர். பிரதமர் மோடி வருகை குறித்த திட்டம் என்பது 2 மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்யப்பட வேண்டியது என்றும், மோடி பசும்பொன் வருகிறார் என்ற செய்தி எங்கிருந்து தொடங்கியது என தெரியவில்லை என்று பாஜக அண்ணாமலை கூறியதாக வெளியான தகவலை வைத்து, சி.டி.ஆர் நிர்மல்குமாருக்கு திமுக ஐ.டி விங் அணியினரும் திமுக அனுதாபிகளும் அவருக்கு டிவிட்டரில் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்ந்து பதில் கொடுத்து வந்தனர்.

இது குறித்து தலைமைச் செயலகத்தில் விசாரித்தபோது, பிரதமர் மோடி பசும்பொன் வருவது குறித்து எந்த தகவலையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லையென்றும், அதனால்தான், உளவுத்துறைக்கு தென்மண்டல காவல்துறைக்கு அது குறித்து எந்த அறிவுறுத்தலையும், ஏற்பாடுகளையும் செய்யச் சொல்லி சொல்லவில்லை என கூறப்பட்டது. ஆனால், இதனை முழுமையாக மறுத்துள்ள, பாஜக ஐ.டி விங் மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல்குமார், மத்திய அரசு ஏற்கனவே தமிழக அரசிடம் இது குறித்து திட்டத்தை கேட்டதாகவும், தமிழக அரசு முறையான பதிலளிக்கவில்லை என்று கூறப்படுவது உண்மைதான் என்பதுபோல, தனது கருத்தை பகிர்ந்து வருகிறார்.

இந்த பிரச்னையால் பாஜக ஐடி விங் Vs திமுக ஐடி விங் அணியினர் இடையே காரசார கருத்து மோதல் டிவிட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன் - மாநாட்டில் திருமா வேதனை !
உங்களுடன் நீண்ட நேரம் பேச விரும்பியும், இக்கட்டான நிலையில் பேச இயலாத நிலையில் இருக்கிறேன் - மாநாட்டில் திருமா வேதனை !
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Embed widget