கவர்னர் என்பதை மறந்துவிட்டு கட்சியில் இருப்பவர்களைப்போல் பேசி வருகிறார் ஆர்.என்.ரவி - கனிமொழி
பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னரை நியமித்து விடுகிறார்கள்...கவர்னர், தான் ஒரு கவர்னர் என மறந்துவிட்டு ஏதோ கட்சியில் இருக்கக்கூடியவர்கள் போல் மேடையில் பேசி வருகின்றனர் - கனிமொழி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் திமுக பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் மஸ்தான் பேச்சு:- அனைவரும் அனைத்து கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி எனவும், "உள்ளூர் மேலத்துக்கு விளம்பரமா எதற்கு" அதை போல தான் நான் காலை முதல் இரவு வரை உங்களுக்காக பணி செய்து வருகிறேன், ஒவ்வொரு போராட்டத்தின் போதும் கலைஞருடன் துணை நின்று போராடினார் பேராசிரியர், அரசியலில் விலை போகாத அரசியல் தலைவர் தற்போது வாரிசு அரசியல் என பேசி வருகின்றனர். நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம், உதியநிதி அமைச்சரானால் பாலாறும் தேனாறும் ஓடுமா என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்,ஆம் தற்போது தான் பாலாற்றில் தண்ணீர் வருகிறது, அவர் மக்கள் நலனுக்காக சேவை செய்ய உள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது...
பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், பேராசிரியர் போன்ற தலைவரை நாம் சந்திப்பது ஒரு அசாதாரணமான செயல் இல்லை, நம்மை எல்லாம் 2ஜி வழக்கை வைத்து பல அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தார்கள், ஆனால் தற்பொழுது நீதிமன்றம் 2ஜி வழக்குகை பொய் என நீதிமன்றம் உண்மை தீர்ப்பை அளித்துள்ளது. தனக்கு எந்த இழுக்கு வந்தாலும் அதை பற்றி எப்போதும் கோபப்படமாட்டார், ஆனால் தமிழுக்கு, தமிழ் மக்களைக்கு இழுக்கு வந்தால் அதிபடியாக கோபப்படுவார் பேராசிரியர்.
பாஜக ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் ஒரு கவர்னரை போடுறாங்கிறார்கள், அந்த கவர்னர், தான் ஒரு கவர்னர் என மறந்துவிட்டு ஏதோ கட்சியில் இருக்கக்கூடியவர்கள் மாதிரி அவங்க வந்து மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இந்தநிலையில் பேராசிரியர் அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்த பொழுது கூட இருந்திருக்கிறது, அதனாலதான் அவர் அப்பொழுதே பதிவு செய்திருக்கிறார் நாடாளுமன்றத்தில் இந்த கவர்னர் பதவி என்பது மத்தியிலே இருக்கக்கூடிய இந்த ஒன்றிய அரசாங்கம் யூனியன் ஆப் ஸ்டேட் என்பது அவங்க மறந்துவிட்டு இங்க இருக்க கூடியவர்களை ஒடுக்குவதற்காக அவர்கள் கட்சி சார்பில் சில பேரை கொண்டு வந்து கவர்னராக நியமிக்கிறார்கள்,
ஆன்லைன் ரம்மி தடை செய்ய ஆளுநரிடம் கோரிக்கை வைத்தால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க சென்னால் அவர் காலம் தாழ்த்தி வருகிறார். பல முறை சட்ட அமைச்சர் ஆளுநரை சந்தித்தும் தற்போது வரை கவர்னர் ஒப்புதல் அளிக்காதாற்க்கு என்ன காரணம்? மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய கூடாது என ஆளுநரை நியமித்துள்ளார்கள். இந்தி எதிர்ப்பு இன்னும் நீர்த்து போகவில்லை... சூடு சொரணை இருப்பவர்களுக்கு இந்தி எதிர்ப்பு குறையாது என பேசியவர் பேராசிரியர். திரடவிட ஆட்சி என்ன செய்தது என கேள்வி எழுப்பி வருகிறார்கள், தமிழகம் தற்போது வளர்ந்து பாதையில் இருக்கிறது எனவும், மருத்துவம் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது,இதுதான் திராவிட மாடல்.
நீட் மருத்துவ கல்லூரியில் நுழைவு தேர்வு வைத்து தமிழக மாணவர்களை படிக்க கூடாது என சதி திட்டம் செய்து வருகிறார்கள் பஜாகவினர். பெட்ரோல் விலை குறைந்தாலும் மத்திய அரசு விலையை குறைத்து தருவது இல்லை, மக்களை சாதி மதம் என பிரிக்கும் வேலையே பாஜகவினர் செய்து வருகின்றனர். விவசாயிகளுக்கும் எதிராக சட்டம் கொண்டு வந்தால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர் தான் எதிர் கட்சிகள், அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவில்லை ஆனால் திராவிட ஆட்சி அடைந்தவுடன் இளைஞர் நலனில் அக்கறை கொண்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கியவர்கள் முதல்வர் ஸ்டாலின். மருத்துவமனைக்கு வர முடியாதவர்களுக்கு வீடு தேடி மருத்துவம் அளிக்க வேண்டும் என ஒரே நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது தான் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை உருவாக்கியவர் முதல்வர் ஸ்டாலின்.