மேலும் அறிய

திராவிடமாடல் ஆட்சி என்பது மோடி அரசாங்கம் உட்பட ஒத்துக்கொள்கிற ஆட்சியாக நடக்கிறது-ராஜ கண்ணப்பன்

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் இவர்கள் மறைந்த நிலையில் இன்று திராவிட இயக்கத்தின் ஒரே தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.

இனமான பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு மாபெரும் பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் மற்றும் கிராம தொழில் வாரிய   தொழில்வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைக் கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பரையாற்றிப் பேசினர்.

இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், நாடு போற்றும் முதல்வராக நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார். இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக நம்பர் ஒன் முதல்வராக செயல்பட்டு வருவதாக நாளேடுகள் புள்ளிவிபரத்துடன் கூறுகிறது.  அவர் இந்த இயக்கத்திற்கு 52 ஆண்டு காலம் அரசியல் பணியாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்,  திடீரென்று வந்தவர் அல்ல. ஒரு அரசியலில் அனுபவம் என்பது மிகப்பெரிய பலம். அவருடைய முடிவுகள் தெளிவாக இருக்குமே தவிர இந்த இயக்கத்திற்கு என்றுமே தொய்வு ஏற்படாது. அவர் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் இவர்கள் மறைந்த நிலையில் இன்று திராவிட இயக்கத்தின் ஓரே தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். இந்த ஆட்சி தொடர்ந்து நடக்கும். இவர் இருக்கும் வரை இந்த ஆட்சியில் இவர் தான் முதலமைச்சர். அதை யாரும் மாற்ற முடியாது. தமிழ்நாடே இன்று அவர் பின்னால் சென்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எடப்பாடி கூறுகிறார். அவருக்கு கூறிக்கொள்கிறேன் இந்தியாவிலேயே சட்டம், ஒழுங்கை பேணிப்பாதுகாப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.  திராவிட இயக்கம் இருக்க வேண்டும், திராவிட மாடல் ஆட்சி என்பது மோடி அரசாங்கம் உட்பட ஒத்துக் கொள்கின்ற ஆட்சியாக இன்று தமிழ்நாட்டில் இருக்கிற மாபெரும் ஆட்சி நடக்கிறது என்றால் அது முக ஸ்டாலின் தலைமையில் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது.  அப்படிப்பட்ட நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்று திராவிட இயக்கம் இல்லை என்று சொன்னால் தமிழ்நாடு இல்லை.

பேராசிரியரைப்பற்றி கூறவேண்டுமானால் திமுக சோதனையா காலகட்டத்தில் இருந்த போது கலைஞருக்கு உற்ற துணையாக இருந்து கழகத்தை காத்தவர் பேராசிரியர்.  திராவிட இயக்கம் , கொள்கை  இரண்டையும் தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்த உத்தமான மனிதர் பேராசிரியர். மோடி அரசு தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது. தமிழகத்திற்கான நிதியாதாரத்தை தர மோடி அரசு மறுக்கிறது. ஏன் என்றால் நாம் கொள்கை ரீதியாக ஒன்றிய அரசுடன் மாறுபடுகிறோம். 22 சட்ட மசோதக்கல் இன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. நடிகர்கள், இசைக்கலைஞர்களை வைத்து ஒரு போதும் பாஜக தமிழகத்தில் ஓட்டு வாங்க முடியாது. தமிழ்நாட்டு மக்கள் உணர்வுகளை, தமிழ்நாடு மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் முதல்வராக கொள்கையை மாறதவராக  இருப்பவர் நமது முதல்வர்” என்று பேசினார். தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 இடங்ளிலும் வெற்றிவாகை சூடவேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
IND vs SA 4th T20: கடைசி டி20 போட்டி! கெத்து காட்டுமா இந்தியா? தடை போடுமா தெ.ஆப்பிரிக்கா?
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
“அந்நியனாக” மாறிய பஸ் டிக்கெட்! மண்டையை பிய்த்துக் கொண்ட பயணிகள் - கும்பகோணத்தில் குழப்பம்
Embed widget