![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
DMK Meeting Postponed:தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு எதிரொலி.. திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு..!
தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருவதால் திமுக இளைஞரணி மாநாடு இரண்டாவது முறையாக தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைப்பதாக திமுக தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.
![DMK Meeting Postponed:தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு எதிரொலி.. திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு..! The DMK youth team conference has been postponed without announcing the date DMK Meeting Postponed:தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு எதிரொலி.. திமுக இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/18/208d63b566ff3a0c4c158c2076147e6e1702923092570113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வருகின்ற 24ம் தேதி சேலத்தில் நடக்கவிருந்த திமுக இளைஞரணி மாநாடு இரண்டாவது முறையாக தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிச.17ம் தேதி நடைபெறவிருந்த மாநாடு சென்னை வெள்ளம் காரணமாக டிச. 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூரில் திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக முதன்மை செயலாளர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு நேற்று மாநாடு நடைபெற இருக்கும் பந்தலை நேரில் ஆய்வு செய்தனர். திமுக இளைஞரணி மாநாட்டிற்கான முகப்பு வளைவு, மேடை, அரங்குகள் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெரும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருவதால் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல்வேறு அமைச்சர்கள் தென் மாவட்டங்களில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சேலத்தில் நடைபெற இருந்த திமுக இளைஞர் அணி மாநாடு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை மழை பாதிப்பு காரணமாக டிசம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த முறை தேதி அறிவிக்கப்படாமல் திமுக இளைஞரணி மாநாடு ஒத்தி வைக்க படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)