மேலும் அறிய

நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் இல்லை; வெறும் வார்த்தை ஜாலம்: திமுகவை சாடிய அன்புமணி ராமதாஸ்

காவல்துறைக்கு தெரியாமல் எந்த ஒரு போதைப் பொருளும் விற்பனை செய்ய முடியாது. காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளது.திராவிட மாடல் என்று சொல்லி மூன்று தலைமுறையில் மக்களை குடிகாரனாக மாற்றி இருக்கிறார்.

நீர் மேலாண்மைக்கு, விவசாயத்திற்கு  முக்கியத்துவம் அளிக்காத திமுக அரசு வார்த்தை ஜாலத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது-அன்புமணி ராமதாஸ் பேட்டி

நீர் மேலாண்மைக்கு  முக்கியத்துவம் இல்லை; வெறும் வார்த்தை ஜாலம்: திமுகவை சாடிய அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்  மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, காவேரி ஆற்றில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வினாடிக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது .சென்னை மக்களுக்கு ஓராண்டு குடிநீர் தண்ணீர் 15 டிஎம்சி. நீர் மேலாண்மைக்கு, விவசாயத்திற்கு  முக்கியத்துவம் அளிக்காத திமுக அரசு வார்த்தை ஜாலத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது.முதல்வர் வரும் காலத்தில் காவேரியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம்.தமிழ்நாட்டில் ஐந்து கோடி மக்கள் காவிரியை நம்பி உள்ளனர்.

ஊழல் செய்வது, மின் கட்டணத்தை உயர்த்துவது, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, கஞ்சா போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக தமிழகத்தில் கிடைக்கிறது இதுதான் திராவிடம் மாடல். தமிழ்நாட்டில் அன்றாடம் கொலை நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துகின்றனர்.தமிழ்நாட்டில் 69 இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முதல்வர் ஜாதி வாடரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் 69 இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்துள்ளது.உச்சநீதிமன்றம் இரண்டு முறை ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த தரவு சேகரியுங்கள் என்று கூறியும் வேண்டு மென்று கணக்கெடுப்பு நடத்தவில்லை. முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.  ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் ஜாதி வாரியாக கேட்பார்கள் என்று கணக்கெடுக்க பயப்படுகின்றார். உண்மையிலேயே சமூக நீதி மீது அக்கறை இருந்தால் ஜாதிவாரி கணக்கு முதல்வர் எடுத்திருப்பார்.எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டமன்றத்தில் முதல்வர் பொய் பேசுகிறார். இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.அருந்ததியர்களுக்கு பரிந்துரை செய்த ஜனார்த்தனன் குழு வன்னியர்களுக்கும் பரிந்துரை செய்துள்ளது. மக்கள் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மின்சாரத் துறையில் ஊழல், லஞ்சம், நிர்வாக சீர்கேடு, நிர்வாகிகளுக்கு தெரியாத அதிகாரிகள், அமைச்சர்கள். அரசு மின் உற்பத்தி செய்ய மூன்று ரூபாய் நாற்பது பைசா. ஆனால் தனியாரிடம்  மின்சாரம் 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். இதுதான் திராவிட மாடலா? ,17 ஆயிரம் மெகாவாட் மின் திட்டங்கள் 20 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது.23 மாதத்தில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி அரசு திமுக அரசு.  33.7 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றில் ஒரு பங்கு உயர்த்தப்பட்டுள்ளது இது மக்கள் விரோத ஆட்சி .

இந்திய அரசும் தமிழக அரசும் தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை ராணுவத்தின் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசு இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது தமிழக அரசுக்கும் அதிகாரம் இருக்கிறது.காலநிலை மாற்றத்தின் காரணமாக வடநாட்டில் நாட்டில் அதிக அளவு மழை பெய்துள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் அரிவாள் கலாச்சாரம் வேதனை அளிக்கிறது.  பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

போதைப் பொருள் கடத்தல் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குன்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். காவல்துறைக்கு தெரியாமல் எந்த ஒரு போதைப் பொருளும் விற்பனை செய்ய முடியாது. காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ளது.திராவிட மாடல் என்று சொல்லி மூன்று தலைமுறையில் மக்களை குடிகாரனாக மாற்றி இருக்கிறார்.  நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குகிராரா? அல்லது முடியவில்லையா?காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள். காவல்துறையில் உயர் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யுங்கள் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget