Thangamani DVAC Raid: ‛அதிமுக உட்கட்சி தேர்தலை திசை திருப்ப தங்கமணி வீட்டில் ரெய்டு...’ -இபிஎஸ் குற்றச்சாட்டு!
அரசியல் காழ்புணர்ச்சியோடு திமுக வருமானவரி சோதனையை நடத்துகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சாரத் துறை முன்னாள் அமைச்சர் பி,தங்கமணி(Thangamani), தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மூலமும், 2016 முதல் 2020 வரையிலானபணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக நேற்று நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் சுண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு தொடர்பாக பி.தங்கமணி(Thangamani) மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் தேர்முக உதவியாளர் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் 69 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் அதிரடி சோதனை(Raid) நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, இந்த வருமான வரி சோதனை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். அதில், அதிமுகவை நேரடியாக எதிர்க்க முடியாமல் திமுக அரசு குறுக்கு வழியில் நடத்தும் சோதனை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசானது வேண்டுமென்றே திட்டமிட்டு தங்கமணி வீடு, உறவினர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான்.
#BREAKING | அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு: ஓபிஎஸ்-இபிஎஸ் கண்டனம் https://t.co/wupaoCQKa2 | #Thangamani | #edappadipalaniswami | #AIADMK | #opanneerselvam pic.twitter.com/iaxbPNzIm4
— ABP Nadu (@abpnadu) December 15, 2021
அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் எழுச்சியோடு நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் திமுக அரசு திட்டமிட்டு சோதனை நடத்தி திசை திருப்ப முயற்சிக்கிறது. அதிமுகவின் மக்கள் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியாமல் இத்தகைய சோதனையை முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகிறது.
திமுக அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது பெரும்பானமை அறிவிப்புகள் நிறைவேற்றவில்லை. திமுக கட்சி தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட நீட் தேர்வு ரத்து , பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சரியான முறையில் தூர்வாறாத காரணத்தால் கனமழை நேரத்தில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதி போன்ற எதையும் செய்யவில்லை. இவற்றையெல்லாம் மறைத்து மக்களை திசை திருப்புவதற்காக சோதனை நடத்தப்படுகிறது.
#BREAKING
— ABP Nadu (@abpnadu) December 15, 2021
தேர்தல் வரும்போதெல்லாம் மாறுவது பாமக-வின் வாடிக்கை
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பாமகவிற்கு எதிராக முதல் கருத்து
பாமகவிற்கு அதிமுக என்ன துரோகம் செய்தது என இராமதாசு விளக்க வேண்டும் ; அதை சொன்னால்தானே நாங்கள் பதில் சொல்ல முடியும் : பழனிசாமி#ADMKVsPMK
எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் அதிமுக சட்டரீதியாக சந்திக்கும். இதுபோன்ற காரணத்தினால் அதிமுக வீழ்ந்துவிடும் என்று நினைத்தார்கள் ஆனால் நிமிர்ந்து நிற்கிறது. ஆனால், திமுகவை சேர்ந்த 13 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குகள் உள்ளது.மேலும், தற்போது எல்லாதுறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் திமுகவின் தாரக மந்திரமாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்