மேலும் அறிய

பெட்ரோல் குண்டு வீச்சு; பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் - அண்ணாமலை ஓபன் டாக்

பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும் எனபதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பாஜக அமைதியை விரும்பக்கூடிய கட்சி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்

தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசி வருவதை பார்த்து கொண்டு பாஜக தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள், அவர்கள் களத்திற்கு வந்தால் என்ன ஆகும். இதனை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பாஜக அமைதியை விரும்பக்கூடிய கட்சி என்று கிழக்கு தாம்பரத்தில் நடைபெற்ற கருத்தருங்கு நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
 
தாம்பரம் அடுத்த கேம்ப்ரோட்டில்  உள்ள தனியார் மண்டபத்தில் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநில தலை அண்ணாமலை கலந்து கொண்டார்.

பெட்ரோல் குண்டு வீச்சு; பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் - அண்ணாமலை ஓபன் டாக்
 
பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசிய போது, இரண்டு நாட்களுக்கும் முன்பு என்.ஐ.ஏ. அமலாக்கத்துறை, பி.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களிடத்தில் சோதனையை நடத்தினர். இந்தியா முழுவதும் 105 பேர் கைது செய்யபட்டனர்.  இந்த சோதனையில் தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த இரு நாட்களாக பாஜக தொண்டர்கள் மீது, சொத்துகள் மீது, அலுவலகம் மீது பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கோவையில் 12 இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ராதமநாதபுரத்தில் 1 இடத்தில், செங்கல்பட்டு 1 இடத்தில் என தமிழகம் முழுவதும் 19 இடத்தில், ஆர் எஸ்.எஸ். இந்து முண்ணனி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. இது வன்மையாக கண்டிக்கதக்கது.

பெட்ரோல் குண்டு வீச்சு; பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் - அண்ணாமலை ஓபன் டாக்
 
காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது. முதல்வர் அமைதி பூங்கா என்று சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து கொண்டு நம் தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் களத்திற்கு வந்தால் என்ன ஆகும். இதனை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பாஜக அமைதியை விரும்பக்கூடிய கட்சி. மாநில டிஜிபியை சந்தித்து பாதுகாப்பு கோரி மனு அளித்து கேட்டிருக்கிறேம். அமித்ஷா அவர்களுக்கு கூட கடிதம் எழுதியிருக்றேன். பிரிவினை வாதிகளை அடக்க வேண்டும். காவல்துறை திமுக எம்.பி. அ.ராசா பேசியதற்கு போரட்டம் நடத்திய 100 பாஜக தொண்டர்களை கைது செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம் முழுவதும் 19 இடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஒருவரை கூட கைது செய்யவில்லை என்று விமர்சித்தார். 
 
தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்தால் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம், மூன்று நாட்களாக ஒரு கண்டன அறிக்கை கிடையாது. திமுக ஆட்சி ஒரு தலை பட்சமாக செல்கிறது. அமைதியின் முறையில் சென்று கொண்டிருக்கிறோம்.  26ம் தேதி மாபெரும் அறப்போராட்டம் கோவையில் நடைபெறும். 
 
பெட்ரோல் குண்டு வீச்சு; பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் - அண்ணாமலை ஓபன் டாக்
 
தேசிய தலைவர் ஜே.பி.நட்டா எய்ம்ஸ் குறித்து பேசியிருந்ததை வழக்கம் போல தமிழக எம்பிக்களின் முதல் வேலை தமிழகத்தில் எந்த வேலையும் நடக்க கூடாது என முனைப்பு காட்டுவார்கள். மக்களை முட்டாளாக்க நினைப்பார்கள். 2018 டிசம்பர் ஜப்பான் நாட்டை சார்ந்த ஜக்கா நிறுவனத்தோடு கைகோர்த்து அந்த நிறுவனம் எய்ம்ஸ் கட்ட உதவி செய்யும் 2021 மார்ச் மாதம் கையெழுத்தானது.  மத்திய அரசு கேபினட் அப்ரூவலில் இருந்த 53% அதாவது 1974 கோடியாக உயர்த்தப்பட்டது.  164 கோடி ரூபாயில் 2வது அப்ரூவல் வழங்கப்பட்டது. மத்திய அரசு கொடுக்க வேண்டிய பணம் 95% கொடுக்கப்பட்டு விட்டது.  
 
அக்டோபர் 2026 எய்ம்ஸ் முழுமையாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும், பி.எஃப்.ஐ சேர்ந்த நபர்களை மத்திய அரசும், மாநில அரசும் இந்திய இறையாண்மையை காக்கும் வகையில் கைது செய்திருக்கிறார்கள். தாம்பரம் திமுக எம்.எல்.ஏ. ராஜா தனியார் தொழிற்சாலைக்கு சென்று மிரட்டியது குறித்து கேட்டதற்கு, ஜே.பி நட்டா திமுக குறித்து சொன்னார் அப்போது, குடும்ப கட்சி, மணி சுருட்டுவது, கட்டப்பஞ்சாயத்து இது தான் திமுக என நட்டா பேசினார். எம்.எல்.ஏ குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பத்திரிகையில் செய்தி வெளியானதால் வழக்குப்பதிவு செய்தார்கள் கைது நடவடிக்கை இருக்காது என்றார். அவரை காப்பாற்ற தான் பார்ப்பார்கள் என்று பேசினார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
Trump Vs Musk: “அவரு, அத வச்சுக்கிட்டு ஜாலியா விளையாடலாம்“ - எலான் மஸ்க்கை கலாய்த்த ட்ரம்ப், எதற்கு தெரியுமா.?
“அவரு, அத வச்சுக்கிட்டு ஜாலியா விளையாடலாம்“ - எலான் மஸ்க்கை கலாய்த்த ட்ரம்ப், எதற்கு தெரியுமா.?
US Texas Flood: அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
Watch Video: “நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
“நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
Trump Vs Musk: “அவரு, அத வச்சுக்கிட்டு ஜாலியா விளையாடலாம்“ - எலான் மஸ்க்கை கலாய்த்த ட்ரம்ப், எதற்கு தெரியுமா.?
“அவரு, அத வச்சுக்கிட்டு ஜாலியா விளையாடலாம்“ - எலான் மஸ்க்கை கலாய்த்த ட்ரம்ப், எதற்கு தெரியுமா.?
US Texas Flood: அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
Watch Video: “நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
“நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
CHN Power Shutdown(08.07.25): அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?!  எங்கெங்கன்னு தெரியுமா.?
அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?! எங்கெங்கன்னு தெரியுமா.?
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
Embed widget