மேலும் அறிய
Advertisement
866 கோவில்களுக்கு குடமுழுக்கு.. இது ஆன்மீக புரட்சி.. அமைச்சர் சேகர் பாபு அளித்த தகவல்..
இந்து சமய அறநிலையத்துறையில் கூடுதல் மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும், தமிழ்நாடு இந்துசமய நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் ராமானுஜர் பிறந்த ஸ்தலம், மணிமண்டபம் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டார். அதற்கு முன்பாக ஸ்ரீ ராமானுஜர் சன்னதி ஆதிகேச பெருமாள் தாயார் சன்னதிகளில் தமிழ்நாடு சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தாமோ.அன்பரசனுடன் இணைந்து சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டு கோதை யானையிடம் ஆசி பெற்றார்.
அதன்பின் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தை ஆய்வு செய்து அதை புதுப்பிக்கும் பணிகளுக்கான வரைபடங்களை பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர் சந்திப்பில் , "இதுவரை 866 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி ஒரு ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தி உள்ளோம். தமிழக முழுவதும் பல்வேறு திருக்கோயில்களில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த ஆட்சியில் அதிக அளவில் திருப்பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் இந்த திருக்கோயிலில் திருப்பணிகள் துவங்க திட்டமிட்டு அதற்கான முதல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 2021 அதிமுக ஆட்சியில் கடைசி நாள் என்று எந்தவித பணிகளும் முறையாக நடைபெறாத நிலையில் ராமானுஜர் மணி மண்டபம் திறக்கப்பட்டதாகவும் தற்போது அது பயன்பாட்டில் இல்லை என்பதும் வருத்தமளிக்கிறது.
மீட்க நடவடிக்கை
இதனை புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அமைச்சர் தாமோ.அன்பரசன், ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை கோரிக்கைகளை ஏற்று தற்போது இது புனரமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தனியார் அமைப்புடன் இணைந்து இவ்வளாகத்தில் ராமானுஜரின் வரலாறை அறிந்து கொள்ளும் வகையில் ஒலி ஒளி காட்சிப்பட கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. இதேபோல் திருக்கோயில் நிலங்களை மீட்க பெயரளவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் மட்டுமே இருந்த நிலையில், தற்போது மூன்று பேர் நியமிக்கப்பட்டு அதன் பேரில் அதிக அளவில் திருக்கோயில் நிலங்கள் தமிழக முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்க நடவடிக்கை எடுப்பார்கள்
விரைவில் நல்ல முடிவு
திருவண்ணாமலையில் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கட்டணம் பெற்றது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும், அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் என வரும் நிலையில் சிறப்பு தரிசனத்தில் சற்று நெருக்கடி ஏற்படுவது நிஜம் என்றும் அதனை போக்கும் வகையில் அனைத்தும் விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது காஞ்சி மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் வான்மதி உள்ளிட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
காஞ்சிபுரம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion